spot_img
10.7 C
London
spot_img
Home மலேசியா அமைச்சர் ஸ்டீவன் சிம் – வர்த்தக சங்கங்கள் கலந்துரையாடல்: ஆக்கப்பூர்வ பலனை அளித்தது -நிவாஸ் ராகவன்

அமைச்சர் ஸ்டீவன் சிம் – வர்த்தக சங்கங்கள் கலந்துரையாடல்: ஆக்கப்பூர்வ பலனை அளித்தது -நிவாஸ் ராகவன்

0
289

கோலாலம்பூர், மே 8-

மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கம், மற்றும் 3 பாரம்பரிய துறைகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து கொண்டனர்.

பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நல்ல முயற்சி மேற்கொண்ட மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங்கிற்கு கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தலைவர் நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.

வர்த்தகர்கள் குறிப்பாக சிறு-நடுத்தர தொழில்துறையினரின் பிரச்சனைக்குத் தீர்வு காண மனித வள அமைச்சு தயார் நிலையில் இருப்பதையே இந்தக் கலந்துரையாடல் காட்டுகிறது என்றார்.

அமைச்சர் அறிவித்த வழிகாட்டி 3 பாரம்பரிய துறைகள் எதிர்நோக்கும் சவால்களை எளிதாகக் கையாள உதவும்.

அதே வேளையில், வர்த்தகச் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில், உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்கான அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமட் அலி ஆகியோருடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கும் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங்கிற்கு சங்கம் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக என்று நிவாஸ் குறிப்பிட்டார்.