கோலாலம்பூர், ஜூன் 18-
தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் கோ ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காணும் திரில்லர் தொடர், 1993, நேரடி-அதிரடி தொடர் அலாதீன், புராண தொடர், ஷீரடி சாய், மர்ம திரில்லர் திரைப்படம், ரணம் அறம் தவறேல் மற்றும் அதிரடி-திரில்லர் திரைப்படம், இடி மின்னல் காதல் உள்ளிட்ட உள்ளூர் மற்றும் சர்வதேசத் தமிழ் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை இந்த ஜூன் மாதத்தில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
சதீஸ்வரன், சாந்தினி நாகதுர்கா, ஹம்சினி பெருமாள், சங்கபாலன் மற்றும் பல திறமையான உள்ளூர் கலைஞர்கள் நடிக்கும் உள்ளூர் இயக்குநர் சத்தியரூபன் ராஜா இயக்கிய 1993 எனும் உள்ளூர் தமிழ் திரில்லர் தொடரை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.
1993லிருந்து 2023-க்கு, அதாவது முப்பது வருட எதிர்காலத்திற்கு அனுப்பப்பட்ட போது ஒரு தொடர் கொலையாளியை எதிர்கொள்ளும் ஒரு கொலை துப்பறியும் நபரான அர்ஜுனனை உள்ளூர் திறமைகளான சுரேஷ் ரோஜென் மற்றும் யாஸ்மின் ஹர்ஷன் ஆகியோர் தயாரித்த 1993 தொடர் சித்தரிக்கிறது. 1993க்கு மீண்டும் வந்து தனது மனைவியுடன் இணைய, அவர் 2023இல் நிகழ்ந்த ஒரு கொலை மர்மத்தை தீர்க்க வேண்டும். ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை முதல் ஒளிபரப்பு காணும் புதிய அத்தியாயங்களுடன் 1993 ஜூன் 17 இரவு 9.00 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் கோ ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காணுகிறது.

சர்வதேச நிகழ்ச்சிகள் முன்னணியில், மாயாஜால விளக்கைக் கண்டுபிடித்த பிறகு மாயாஜால உலகில் நுழையும் ஆதரவற்ற அலாதீனைப் பற்றிய சுவாரஸ்சியமான கதையைச் சித்தரிக்கும் அலாதீன் எனும் நேரடி அதிரடி தொடரை வாடிக்கையாளர்கள் கண்டு களிக்கலாம்.
அலாதீன் இளவரசி யாஸ்மினை நேசிக்கிறார். இருவரும் இணைந்து ஜாஃபர் பாக்தாத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதிலிருந்து தடுக்கிறார்கள். இந்த நேரடி அதிரடி தொடரில் சித்தார்த் நிகம், அவ்னீத் கோர், அமீர் தல்வி மற்றும் ராஷுல் டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். அலாதீன் ஜூன் 17 மாலை 5.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் கோ ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காண்கிறது.
சச்சின் ஆம்ப்ரே மற்றும் ஹர்ஷ் பி அகர்வால் இயக்கிய, புராணத் தொடரான ஷீரடி சாய்-இல் அபீர் சூஃபி, துஷார் தல்வி மற்றும் அபிஷேக் நிகம் ஆகியோர் நடித்துள்ளனர். ஷீரடி மக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஏராளமான சோதனைகள் மற்றும் இன்னல்களை எதிர்கொண்டாலும் அவர்களுக்கு அமைதி மற்றும் அன்பைக் கண்டறிய உதவும் சாய்பாபாவைப் பற்றிய கதை. ஷீரடி சாய் ஜூன் 17 மாலை 7.00 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் கோ ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காண்கிறது.

வைபவ், நந்திதா ஸ்வேதா மற்றும் தன்யா ஹோப் நடிப்பில் ஷெரீஃப் இயக்கிய ரணம் அறம் தவறேல் எனும் மர்ம திரில்லர் திரைப்படத்தையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். ஒரு நகரத்தில் நிகழும் தொடர் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளியைக் கைது செய்யக் காவல்துறைக்கு உதவ அழைக்கப்படும் முக மறுசீரமைப்புக் கலைஞரை இக்கதைச் சித்தரிக்கிறது. ரணம் அறம் தவறேல் ஜூன் 21 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ தங்கத்திரை (அலைவரிசை 241)-இல் முதல் ஒளிபரப்பு காண்கிறது.
விபத்துக்குப் பிறகு ஒருவருக்கு ஒருவர் செய்த தவறுகளைத் தற்செயலாக ஈடு செய்யும் நபர்களைச் சிபி புவன சந்திரன் மற்றும் பவ்யா த்ரிகா ஆகியோர் நடித்த இடி மின்னல் காதல் எனும் அதிரடி-திரில்லர் திரைப்படம் சித்தரிக்கிறது. பழிவாங்குவதை விட நல்ல செயல்களைச் செய்வது மிகவும் பொதுவான செயல் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இடி மின்னல் காதல் ஜூன் 28 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ தங்கத்திரை (அலைவரிசை 241)-இல் முதல் ஒளிபரப்பு காண்கிறது.





