spot_img
8.6 C
London
spot_img
Home கலை உலகம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் & சமையல்காரர்களுடன் நேர்காணல்!

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் & சமையல்காரர்களுடன் நேர்காணல்!

0
252

கோலாலம்பூர், ஜூன் 18-

ஸ்விந்த் முரளி & ரோஸ்விந்த் முரளி, தொகுப்பாளர்கள் & சமையல்காரர்கள்:

உங்களின் பின்னணி மற்றும் உங்களைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

ஜஸ்விந்த்: எனது பெயர் ஜஸ்விந்த். நான் தற்போது ஜோகூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பல் மருத்துவராகப் பணிபுரிகிறேன். குடும்பத்தில் மூத்த மகளாக இருந்தாலும், சுதந்திரத்தின் சிறகுகள் கொடுக்கப்பட்டு பலமான பொறுப்புணர்வோடு வளர்க்கப்பட்டேன். இது எளிதானது அல்ல. ஆனால் ஒரு நெகிழ்வு, திறந்த மனது மற்றும் கலைச் சார்ந்த ஆளுமை கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்ததால், எனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நான் ஆதரவைப் பெற்றேன். என் தந்தை, முன்னாள் இசைக்கலைஞர் மற்றும் இசைக்குழு கலைஞர் மற்றும் என் அம்மா, நன்கு அறியப்பட்ட மலேசிய கலைஞரும் நடனக் கலைஞருமாவர். எனவே இவர்கள் என்னை கலைத்துறையில் மிகவும் எளிதாக அறிமுகப்படுத்தினர். ஆர்டிஎம்மில் ‘பாச பிணைப்பு’ படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்புடன் இந்தத் துறையில் எனது பயணம் தொடங்கியது மட்டுமல்லாமல் என் ஆர்வமும் அதிகரித்தது. ‘யுத்த மேடை’ சீசன் 10 (வெற்றியாளர்), ‘பெட்டி குள்ள என்ன’, ‘திகில்’ போன்ற ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பல ஆர்டிஎம் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளேன். எனது தாயாரின் நடனக் குழுவான சஹிபா ஆர்ட்ஸுக்கு உதவுவதோடு ​​நான் தற்போது பல நிகழ்வுகளில் நடனப் படைப்புகளை நிர்வகிக்கிறேன்.

ரோஸ்விந்த்: என் பெயர் ரோஸ்விந்த். நானும் ஜஸ்விந்தும் இரட்டைச் சகோதரிகள். எங்கள் குடும்பம் கலை உலகத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. ஏனெனில், நடனம், பாடுதல், இசைக் கருவிகளை வாசித்தல் மற்றும் செய்தி வாசித்தல் என கலைத்துறைச் சார்ந்த பணிகளில் குடும்ப உறுப்பினர்கள் ஈடுப்பட்டுள்ளனர். நான் ஒரு மனித வள நிர்வாகியாகப் பணிப்புரிகிறேன். அங்கு மனிதர்களையும் விஷயங்களையும் நிர்வகிக்க எனது திறன்களைப் பயன்படுத்துகிறேன். அதுமட்டுமின்றி நடனமாடுவதும் பகுதி நேர ஒப்பனையையும் எனக்கு விருப்பம். இது எனது அடையாளத்திற்கு மேலும் மதிப்புச் சேர்க்கிறது. இத்தகையக் கலைச்சூழலில் வளர்ந்தது இந்தக் கலகலப்பான மற்றும் வெளிப்படையான துறையில் எனது ஆர்வத்தைத் தூண்டியது. எனது நிறுவனத் திறன்கள் மற்றும் கலையின் மீதுக் கொண்ட ஆர்வங்கள் பலதரப்பட்ட அனுபவங்கள் மற்றும் ஆர்வங்களுடன் கூடிய பல்துறை மனிதராக என்னை மாற்றியது.

செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியில் உங்கள் அம்மா மற்றும் சகோதரிகளுடன் சேர்ந்து சமைத்த மற்றும் தொகுத்து வழங்கிய அனுபவம் எப்படி இருந்தது?

ஜஸ்விந்த்: செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும் சமைப்பதும் எனக்கு மிகவும் உற்சாகமான மற்றும் உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. எனது படிப்பைத் தொடரும் தருவாயில் எனது குடும்பத்தை விட்டு சுமார் ஆறு வருடங்கள் பிரிந்து இருந்ததால், எனது இளமைப் பருவத்தில் அவர்களுடன் சேர்ந்து சமைக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். நான் தவறவிட்ட வாய்ப்பை இந்த நிகழ்ச்சி எனக்கு வழங்கியது. நிகழ்ச்சி முழுவதும் தமிழில் உரையாடுவது சவாலாக இருந்தாலும், அது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக அமைந்தது.

ரோஸ்விந்த்: என் குடும்ப உறுப்பினர்களுடன் திரையைப் பகிர்ந்தது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. இந்தப் பொன்னான வாய்ப்பை வழங்கிய ஆஸ்ட்ரோவுக்கு இவ்வேளையில் நான் நன்றிக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

சமையல்காரர் மற்றும் தொகுப்பாளர் என்ற இரண்டு பாத்திரங்களையும் எவ்வாறு நிர்வகித்தீர்கள்?

ஜஸ்விந்த்: தொகுப்பாளராகவும் சமையற்காரராகவும் இருப்பது எனது அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதி என்பதால் என்னால் அப்பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடிந்தது. மேலும், ஒரு பல் மருத்துவராக, நான் ஒளிப்பதிவுக் கருவியின் முன் வெட்கப்படாததால், பேசுவது அவ்வளவு சவாலாக இல்லை. சமையல் ஆர்வலராக இருப்பதால், புதிய சமையல் குறிப்புகளை ஆராய்வதில் எனக்கு இயல்பாகவே விருப்பம் இருந்தது.

ரோஸ்விந்த்: சமையல் செயல்முறை முழுவதும் எனக்கு வழிகாட்டுதல்கள் இருந்ததால் அது அவ்வளவு கடினமாக இல்லை. படக்குழுவினர், ஒப்பனைக் கலைஞர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் மிகவும் உதவியாக இருந்தனர். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் நிலையான ஆதரவிற்கும் நன்றி.

உங்களுக்கு எந்தவிதமான சமையல் தொழில் சார்ந்த பயிற்சியும் இல்லாவிட்டாலும் சமையலில் எப்படி ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஜஸ்விந்த்: எனது குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் படிக்கும் போது, ​​நான் பொறுப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டியிருந்தது. அப்போது நான் சமையல் திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், இணையம் வாயிலாகப் பல சமையல் குறிப்புகளை ஆராய்வதற்கும் முயற்சித்தேன். சுவையான உணவைச் சமைக்கும் என் பாட்டி மற்றும் அம்மாவின் சமையல் குறிப்புகளை நான் என் சமையலில் செயல்படுத்தினேன்.

ரோஸ்விந்த்: சாப்பிடுவதில் எனக்கு முற்றிலும் விரும்பம். என்னை ஓர் உணவு ஆர்வலராகவும் கருதுகிறேன். நான் பல்வேறு உணவு வகைகளை ஆராய்வதில் மகிழ்ச்சி அடைவதால் இது சமூக ஊடகங்கள் மூலமாகவும் எனது குடும்ப உறுப்பினர்களின் உதவியுடனும் சமையல் நுட்பங்கள் மற்றும் உணவு வழங்கல் குறிப்புகளைக் கண்டறிய வழிவகுத்தது.

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உங்களை ஈர்த்தது என்ன?

ஜஸ்விந்த்: நான் பல்வேறு வகையான சமையல் வகைகள் மற்றும் சமையல் முறைகளை ஆராய வேண்டி இருந்தால் இந்த நிகழ்ச்சி எனது கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சி எனக்கு பொறுமையைக் கற்றுக் கொடுத்தது. ஆதரவான குழு உறுப்பினர்களின் உதவியால் இவையனைத்தும் பின்னர் திரும்பிப் பார்க்க மிக அழகான நினைவுகளாகின.

ரோஸ்விந்த்: நிகழ்ச்சியின் தனித்துவமான கருத்து, சமையல் படைப்பாற்றலில் கவனம் செலுத்துதல் மற்றும் உணவின் மீதான எனது ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஆகியவை இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான முக்கிய காரணிகளாகும். அரிதாகப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய சமையல் முறையைச் பயன்படுத்தியதால் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியில் நீங்கள் ரசித்தச் சில பகுதிகள் ?

ஜஸ்விந்த்: நிகழ்ச்சி முழுவதும் நான் நானாகவே இருக்க முடிந்தது. ஒவ்வொரு அத்தியாத்திலும் விருந்தினர்களுக்குப் பரிமாறுவதும், அவர்கள் ஒவ்வொருவரையும் சந்திப்பதும் எனக்குச் சிறந்த அனுபவமாக இருந்தது.

ரோஸ்விந்த்: சாப்பிடுதல் மற்றும் சுவைப் பார்த்தல் ஆகியவை இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முக்கியக் காரணமாகும். இரண்டாவதாக, உணவு ருசிப் பார்ப்பதில் கலந்து கொண்ட விருந்தினர்களை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி. மூன்றாவதாக, அமைதியான மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் சூழல் என் கவனத்தை ஈர்த்தது.

செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியில் சமைத்த உணவு வகைகளில் உங்களுக்குப் பிடித்த உணவு(கள்) என்ன?

ஜஸ்விந்த்: பூசணி மீன் சோதி, மூங்கில் கோழி மற்றும் நிச்சயமாகப் ஃப்ரீன்லீப் மோரு.

ரோஸ்விந்த்: பன்னீர் பட்டர் மசாலா.