spot_img
10.5 C
London
spot_img
Home சமூகம் தேசம் ஊடகத்தின் பிரம்மாண்ட அனைத்துலக விருது விழா!

தேசம் ஊடகத்தின் பிரம்மாண்ட அனைத்துலக விருது விழா!

0
203

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19-

தனது 15ஆவது ஆண்டு நிறைவையொட்டி தேசம் ஊடகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில் அனைத்துலக விருது விழாவை ஏற்று நடத்தவிருக்கின்றது.

வரும் அக்டோபர் 5ஆம் தேதி மாஹ்சா பல்கலைக்கழக அரங்கில் நடைபெறவிருக்கும் இந்த ஐகோன் விருது விழாவில் வர்த்தகம், விவசாயம், விளையாட்டு, ஊடகம் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் கௌரவிக்கப்படுவர் என்று தேசம் ஊடகத்தின் தோற்றுநர் குணாளன் மணியம் தெரிவித்தார்.

பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மக்கள் அடையாளம் காணவும் இவர்கள் அடுத்தக் கட்ட நகர்வுக்குச் செல்லவும் இந்த விருதளிப்பு பெரும் பங்காற்றும் என்று இங்குள்ள பிரசித்திப் பெற்ற உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் குணாளன் மணியம் விவரித்தார்.

இந்த சாதனையாளர்களை எழுவர் கொண்ட நீதிபதிகள் குழு தேர்வு செய்வர். இவர்கள் அனைவரும் சமூகத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்வர் என்றும் அவர் சொன்னார்.

இந்த வரலாற்றுப்பூர்வ விழாவுக்குத் தகவல், தொடர்பு துறை அமைச்சர் பாமி பாட்சில், மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உட்பட பல்லின கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் வருகை புரிவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது ஒற்றுமை அரசாங்கம் என்பதால் மஇகா உட்பட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த விழாவில் வருகை புரிவர் என்றும் குணாளன் கூறினார்.

இந்த விருதளிப்பு விழா கடந்தாண்டு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மலேசிய சாதனையாளர்கள் உலக அரங்கில் புகழ் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் மலேசியாவுக்கு அப்பால் இந்தியாவில் இந்த விருது விழாவைத் தாம் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு இந்த விருது விழாவை நடத்துவதற்கு அரங்கை வழங்கிய மாஹ்சா பல்கலைக்கழகம் மற்றும் நல்லாதரவு வழங்கத் தயாராக இருக்கும் இந்தியா கேட் நிறுவனம் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் தாம் இவ்வேளையில் நன்றி கூறிக் கொள்வதாகவும் குணாளன் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத் தலைவர் நிவாஸ் ராகவன், இந்தியா கேட் நிறுவனர் சரவணன் சுப்பிரமணியம், மஇகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம், கவுன்சிலர் புவனேஸ்வரன், தகவல் தொடர்பு துறை அமைச்சின் பிரதிநிதி குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.