spot_img
9.8 C
London
spot_img
Home சமூகம் சிறார்களிடையே சேமிப்பு பழக்கம் மீதான விழிப்புணர்வு: 700 மாணவர்கள் பங்கேற்பு!

சிறார்களிடையே சேமிப்பு பழக்கம் மீதான விழிப்புணர்வு: 700 மாணவர்கள் பங்கேற்பு!

0
218

கிள்ளான், ஜூன் 22-

சம்பாதித்தல், சேமித்தல், செலவழித்தல், கேளிக்கை மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு நன்கொடை வழங்குவது குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘சா சின் ‘விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

தங்களின் சமூகக் கடப்பாடாக புரூடென்ஷியல் மலேசியா காப்புறுதி மற்றும் புரூடென்ஷியல் அறவாரியம் இந்த நிகழ்ச்சியை நடத்தின.

கிள்ளான் பெண்கள் சீனப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இப்பள்ளி மாணவர்கள், கிள்ளான் ஜெயா தேசிய பள்ளி மாணவர்கள், செந்தோசா தமிழ்ப்பள்ளி, சிம்பான் லீமா தமிழ்ப்பள்ளி, பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றின் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பினாங்கு, சபா, சரவா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள முப்பது தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவர்களுக்கு இவ்வாண்டு இத்திட்டத்தைத் தாங்கள் விரிவுபடுத்த எண்ணம் கொண்டிருப்பதாக மலேசிய புரூடென்ஷியல் நிறுவன தொழில் கழகப் பிரிவு தலைவர் ஜெஃப்ரி லாம் தெரிவித்தார்.

இதுபோன்ற நிகழ்ச்சி மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் என்று சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் கூறினார்.

கிள்ளான் பெண்கள் சீனப்பள்ளியின் தலைமையாசிரியர் ஊய் இயோங் வென், கிள்ளான் ஜெயா தேசிய பள்ளியின் தலைமையாசிரியர் முகமது ஜாஹித் இமான், சந்தோசா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசு சுப்பிரமணியம், சிம்பான் லீமா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் செல்வநாதன், பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஆகியோரோடு செந்தோசா சட்டமன்ற சிறப்பு அதிகாரி உமாராணி ராமகிருஷ்ணன் ஆகியோரும் இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தனர்.