spot_img
9.5 C
London
spot_img
Home தேர்தல் சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: பெரிக்காத்தான் நேஷனலின் பிரச்சாரத்தை உளவு பார்த்தோமா? -அரசாங்கம் மறுப்பு

சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: பெரிக்காத்தான் நேஷனலின் பிரச்சாரத்தை உளவு பார்த்தோமா? -அரசாங்கம் மறுப்பு

0
248

நிபோங் திபால், ஜூலை 4-

சுங்கை பாக்காப் இடைத்தேர்தலையொட்டி ஒவ்வொரு பிரச்சார நடவடிக்கையையும் போலீஸ் மற்றும் தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் எதிர்கட்சியினரின் பிரச்சார நடவடிக்கையை போலீஸ் அளவுக்கதிகமாகக் கண்காணித்து வருவதாக பாஸ் கூறுவதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் போலீசாரும் தேர்தல் ஆணையமும் நேர்மையான மற்றும் நியாயமான முறையில் தங்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்பில் 153 பிரச்சார அனுமாசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எதுவுமே நிராகரிக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

இவ்விவகாரத்தில் அளவுக்கதிகமான கண்காணிப்போ அல்லது பாரபட்சமோ போலீசார் காட்டவில்லை என்றும் அனைவரின் பாதுகாப்புக்கும் அவர்கள் உத்தரவாதம் அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அவர்களின் பிரச்சார நடவடிக்கைகள் அளவுக்கதிகமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஒரு தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன் என்று நிபோங் திபால் பிகேஆர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சைஃபுடின் கூறினார்.


-எப்.எம்.டி.