Homeகலை உலகம்மகிழ்ச்சி பொங்கட்டும்’ என்ற கருப்பொருளுடன் இந்தப் பொங்கலை ஆஸ்ட்ரோ கொண்டாடுகிறது

மகிழ்ச்சி பொங்கட்டும்’ என்ற கருப்பொருளுடன் இந்தப் பொங்கலை ஆஸ்ட்ரோ கொண்டாடுகிறது

கோலாலம்பூர், ஜனவரி 10, 2025 – புத்தாண்டு மலரும் போது, ​​உள்ளூர் அல்லது உலக அளவில் பெரும்பாலான இந்தியச் சமூகத்தால் கொண்டாடப்படும் நான்கு நாள் பண்டிகை, பொங்கல். மகிழ்ச்சி பொங்கட்டும் என்ற மனதைக் கவரும் கருப்பொருளுடன் இவ்வாண்டுப் பண்டிகையை ஆஸ்ட்ரோ வரவேற்கிறது. நகைச்சுவை டெலிமூவித் தொடங்கிச் சமையல் நிகழ்ச்சிப், பல்வேறு நிகழ்ச்சி மட்டும்மல்லாதுத் திரில்லர், காதல் மற்றும் அறிவியல் புனைகதைத் திகில் திரைப்படங்கள் எனப் பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச முதல் ஒளிபரப்புகளை டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

வாடிக்கையாளர்கள் பின்வரும் உள்ளூர் பொங்கல் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டுக் களிக்கலாம்:

நவோமிகா அவிக்னா, சாய் கோகிலா, சுஹந்தி பெருமாள், மாயா அம்லு, டத்தோ கீதாஞ்சலி ஜி மற்றும் பலர் நடித்துள்ளக் குட்டி வாத்தியார், பிரபல உள்ளூர் திரைப்பட இயக்குநர் கோவிந்த் சிங் இயக்கிய நகைச்சுவை டெலிமூவியாகும். ஜனவரி 14 இரவு 9 மணிக்குக் குட்டி வாத்தியார் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

பிரபல உள்ளூர் கலைஞர் விக்கி ராவ் தொகுத்து வழங்கும் எங்க அம்மாயி சமையல் நிகழ்ச்சி, இந்தப் பண்டிகைக் காலத்தில் பார்வையாளர்கள் சமைத்துப் பரிசோதிக்கப் பல்வேறுச் சுவையானப் பாரம்பரிய உணவு வகைகளைச் சித்தறிக்கிறது. பிரபல உள்ளூர் திறமையான எம்.எஸ்.பிரேம் நாத் இயக்கிய எங்க அம்மாயி சமையல் ஜனவரி 14 மாலை 3 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

சுவாரஸ்சியமானப் பல்வேறு நிகழ்ச்சியானச் சரவெடி பொங்கல், முதியோர் இல்லத்தில் அவர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளைச் சித்தறிக்கும். சரவெடி பொங்கல் ஜனவரி 14 மதியம் 2 மணிக்கு முதல் ஒளிபரப்பு காணுகிறது.

அப்பாவிக் கிராம மக்களைக் கொலைச்செய்வதற்காக ஒரு ரகசியப் பரிசோதனை ஆய்வகத்தில் இருந்துத் தப்பிக்கும் மூன்று கொலையாளிகளைத் திரில்லர் திரைப்படமான, அஃறிணை சித்தறிக்கிறது. இந்தக் கொலையாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுகிறார்களா இல்லையா என்பதுதான் கதையின் மையக்கரு. அகோந்தரன் சகாதேவன், உமாகந்தன், விக்னேஷ் பிரபு போன்ற உள்ளூர் திறமைகள் நடித்த அஃறிணை ஜனவரி 13 இரவு 9.30 மணிக்கு முதல் ஒளிபரப்பு காணுகிறது.

வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருந்துப் பின்வரும் உற்சாகமானப் பொங்கல் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் எதிர்பார்க்கலாம்:

பாலாஜி கேசவன் இயக்கத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா மற்றும் பலர் நடித்துள்ள காதல் திரைப்படமான, எமக்குத் தொழில் ரொமன்ஸ், ஜனவரி 15 இரவு 9.30 மணிக்கு முதல் ஒளிபரப்பு காணுகிறது.

அதர்வா, ஆர். சரத்குமார், ரஹமான் மற்றும் அம்மு அபிராமி நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய திரில்லர் திரைப்படம், நிறங்கள் மூன்று ஜனவரி 16 இரவு 9.30 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

பாலசுப்ரமணி கேஜி இயக்கத்தில் ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடித்த அறிவியல் புனைகதைத் திகில் திரைப்படம், பிளாக், ஜனவரி 17 இரவு 9 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

18 ஜனவரி 2025, பேராக், ஈப்போ, இந்திரா முலியா அரங்கத்தில் இரவு 9 மணிக்கு நேரலையாக நடைப்பெறும் ஆஸ்ட்ரோவின் பிரத்தியேக நிகழ்ச்சியான உள்ளூர் தமிழ் ரியாலிட்டி நடனப் போட்டியான ஆட்டத்தின் இறுதிச் சுற்று இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது. அனைத்து மலேசியர்களும் ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் வாயிலாக இப்போதிலிருந்து ஜனவரி 14 வரை நிகழ்ச்சியை நேரலையில் காண நுழைவுச்சீட்டுகளுக்கு முன்பதிவுச் செய்து, 17 ஜனவரி 2025 பேராக், ஈப்போ, இந்திரா முலியா அரங்கத்தில் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், இளம் ரசிகர்கள் உட்பட அனைத்து மலேசியர்களுக்காகவும் ஜனவரி 17 பேராக், ஈப்போ, இந்திரா முலியா அரங்கத்தில் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை பலச் சிறப்பு நடவடிக்கைகள் எங்கள் கைவசம் உள்ளன. இரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த ஆட்டத்தின் இறுதிப் போட்டியாளர்கள், சசி, எல்வின், மூன்நிலா, தேவகன்னி உள்ளிட்டப் பசங்க அணி ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவதோடுப்; பிரத்தியேக வணிகப் பொருட்களையும் வெல்லலாம். இளம் இரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த டிடி & பிரன்ஸ்-இன் கதாப்பாத்திரங்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறலாம்.

ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்ற பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99 கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my  அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.

பொங்கல் நிகழ்ச்சிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, content.astro.com.my  எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

 

spot_img

latest articles

explore more