செராஸ், ஜன. 12-பலாக்கோங் சட்டமன்றம் மற்றும் தாமான் ஸ்ரீ செராஸ் மடானி சமூக தலைவர் ஏற்பாட்டில் இவ்வட்டார பக்தர்கள் ஜோகூர் பாரு மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள ஆலயங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.

40 பேர் அடங்கிய இந்த பக்தர்களுக்கான போக்குவரத்து மற்றும் உணவு ஆகியவற்றை பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வெய்ன் ஓங் சுன் வெய் ஏற்றுக் கொண்டார்.

இவர்கள் அனைவரும் நேற்று இரவு 11.30 மணியளவில் சிலாங்கூர், பலாக்கோங், தாமான் ஸ்ரீ தீமா ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஆலயத்தில் இருந்து புறப்பட்டனர்.

இவர்கள் அனைவரையும் வெய்ன் ஓங் சுன் வெய் வழியனுப்பி வைத்தார்.

அதே வேளையில், இவர்கள் னைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் புத்தாண்டு காலண்டர்களை வழங்கினார்.

இவர்கள் அனைவரும் இன்று  5 ஆலயங்களில் தெய்வீக வழிபாட்டை மேற்கொண்டனர்.

ஜோகூர் பாரு, தம்போய், ஸ்ரீ மகா சிவ முனீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஸ்ரீ ராஜ காளியம்மன் கண்ணாடி ஆலயம், குளுவாங் ஆதிசிவ சக்தி கந்தரீசர் ஆலயம், அருள்மிகு ராஜ மாரியம்மன் தேவஸ்தானம் மற்றும் நெகிரி செம்பிலான், உலு சாவா ஸ்ரீ சிவ சங்கர வால்முனி வனமுனி ஆலயம் ஆகியவையே அந்த ஆலயங்கள்.

மேற்கண்ட தெய்வ திருத்தலங்களுக்கான வருகையை மேற்கொண்ட பலாக்கோங் பக்தர்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர் வெய்ன் ஓங் சுன் வெய்யிற்கு தங்களின் நன்றியை த் தெரிவித்துக் கொண்டனர்.