Homeசமூகம்பி40 மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகளுக்கான நிதியுதவி!  டாக்டர் சுரேந்திரன் வழங்கினார் 

பி40 மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகளுக்கான நிதியுதவி!  டாக்டர் சுரேந்திரன் வழங்கினார் 

காஜாங், பிப். 15-வரும் திங்கட்கிழமை புதிய பள்ளித் தவணை தொடங்கவிருக்கும் நிலையில் இவ்வட்டார பி 40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பள்ளிச் சீருடை, புத்தகப் பை மற்றும் காலணிகளின் செலவீனங்களுக்காக நிதியுதவி வழங்கப்பட்டது.

இதனை பிபிபி சிலாங்கூர் மாநில தலைவர் டாக்டர் எம். சுரேந்திரன் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் வழங்கினார்.

இவர்கள் அனைவரும் பாங்கி தொகுதி தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் ஆவர்.

இங்குள்ள ஜாலான் காஜாங் இண்டா 1,தாமான் காஜாங் இண்டா, ஆஃப் சுங்கை சுவாவில் அமைந்துள்ள பிபிபி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்களோடு அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் கல்வி வாயிலாக ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்பது பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலாவின்  உன்னத நோக்கமாகும்.

இதன் பொருட்டு இந்த மாணவர்களின் கல்விக்கு அடிப்படை தேவைகள் ஒரு பிரச்னையாகிவிடக் கூடாது என்பதற்காக இந்த நிதியுவியைத் தான் வழங்கியதாக டாக்டர் சுரேந்திரன் குறிப்பிட்டார்.

இந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் டாக்டர் சுரேந்திரனுக்கு தங்களின் நன்றியைப் புலப்படுத்தினர்.

spot_img

latest articles

explore more