கோலாலம்பூர், பிப்.22-இங்குள்ள எல்ஆர்டி தண்டவாளத்தில் தவறி விழுந்த பேறு குறைந்த ஆடவர் ஒருவர் ரயில் மோதி மரணமுற்றார்.
இச்சம்பவம் தலைநகர் தித்திவாங்சா எல்ஆர்டி தண்டவாளத்தில் இன்று காலை மணி 8.30 அளவில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
காலை மணி 8.38 அளவில் மெர்ஸ்-999 வாயிலாக தங்களுக்கு அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதாக தீயணைப்பு துறை உயரதிகாரி 1 ஃபாடில் ஹெசாம் முகமது தெரிவித்தார்.
பார்வை கோளாறு உடைய அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மலேசிய சுகாதார அமைச்சின் பணியாளர் உறுதிப்படுத்தியதாக ஃபாடில் ஹெசாம் சொன்னார்.
“சீன ஆடவரான அவர் நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார். இதனை ரயில் ஓட்டுனர் அறிந்திருக்கவில்லை “என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் விவரித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் போலீஸ் விரிவான விசாரணையை முடக்கியுள்ளது.
இச்சம்பவதைத் தொடர்ந்து பிடபிள்யூ, தித்திவாங்சா, செந்தூல் மற்றும் செந்தூல் தீமோர் நிலைய சேவைகள் தடைபட்டன.
பயணிகளின் பாதுகாப்புக்காக தற்காலிகமாக இலவச பஸ் சேவை ஏற்படுத்தித் தரப்பட்டது.


