பெட்டாலிங் ஜெயா, மார்ச் 2-இங்குள்ள சமூக இல்லத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை தப்பிச் சென்ற 17 வயது இளம் பெண்ணை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தவமலர் என்ற பெண்ணே காணாமற் போனதாகப் புகார் செய்யப்பட்டவர்.
இவர் ஆகக் கடைசியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு மணி 7.05 அளவில் இங்குள்ள செக்சன் 12, ஜாலான் 12/6 என்ற இடத்தில் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.
இப்பெண் காணாமற் போனதாக நேற்று மாலை மணி 5.13க்குத் தங்களுக்குத் தகவல் கிடைக்கப் பெற்றதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஷாருல்நிஸாம் தெரிவித்தார்.
“இவரைத் தேடும் பணியில் போலீஸ் தற்போது முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது. தகவறிந்தோர் விசாரணைக்கு உதவும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் கோரிக்கை விடுத்தார்.
“இப்பெண் குறித்த விவரம் அறிந்தோர் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையக நடவடிக்கை அறையுடன் 03-79662222 என்ற எண்ணிலோ அல்லது புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் அய்னா அதிராவுடன் 010-2762186 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் ” என்றார்.
-பெரித்தா ஹாரியான்


