செமினி, மார்ச் 5-சமூக ஊடகத்தின் வழி பகிரப்பட்ட தனியார் வானொலி நிலைய அறிவிப்பாளர்களின் அநாகரியமான காணொளிக்கு எதிராக மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் செமினி வட்டார பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
இச்செயலைக் கண்டித்து இவ்வட்டாரப் பேரவையின் தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் செயலவையினர் செமினி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
தைப்பூச திருவிழாவின் காவடி ஆட்டத்தைக் கேலி செய்த ஒரு தனியார் வானொலியின் அறிவிப்பாளர்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் இச்செயலால் நாடளாவிய இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்துக்கள் என்ற அடிப்படையில் இச்செயலை நாம் அவசியம் கண்டிக்க வேண்டும் என்றார் முத்துகிருஷ்ணன்.


