Homeசமூகம்அத்தியாவசிய பொருட்கள் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!  -பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை பிரதமர் தகவல்

அத்தியாவசிய பொருட்கள் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!  -பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை பிரதமர் தகவல்

சுபாங் ஜெயா, மார்ச் 27- பெருநாள் கால உச்சவரம்பு விலை அமலாக்க திட்டத்தினால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், பொருட்கள் விநியோகத்திலும் தட்டுப்பாடு இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இக்கால கட்டத்தில் குறிப்பிட்ட உணவு பொருட்கள் மலிவான விலையில் விற்கப்படுவதை உறுதிப்படுத்துவதில் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு, விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு தொடர் முயற்சி மேற்கொண்டதாக பிரதமர் தெரிவித்தார்.

“பொருள் தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு இடமில்லை. குறிப்பாக, முட்டை மற்றும் இதர பொருட்கள் சந்தையில் மக்களின் தேவைக்கு ஏற்ப உள்ளன” என்றார் அவர்.

இங்குள்ள யுஎஸ்ஜே சுபாங் மைதீன் பேரங்காடியில் நோன்பு பெருநாளையொட்டி உச்ச வரம்பு விலை அமலாக்க திட்டத்தைப் பார்வையிட்ட போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

 

 

spot_img

latest articles

explore more