புத்ரா ஜெயா, மார்ச் 29-மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலேசியா 50 மனிதநேய மற்றும் பேரிடர் உதவி குழு உறுப்பினர்களை அங்கு அனுப்பும் என்று வெளியுறவு அமைச்சு கூறியது.
மத்திய மியன்மார், வட தாய்லாந்து மற்றும் தென் சீனாவின் ஒரு பகுதியை நேற்று நிலநடுக்கம் உலுக்கியது.
இதனையடுத்து, தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் (நட்மா) வாயிலாக மலேசியா மியன்மாருக்கு நாளை (மார்ச் 30ஆம் தேதி) உதவி குழுவை அனுப்பும் என்று அறிக்கை ஒன்றின் வழி வெளியுறவு அமைச்சு கூறியது.
இந்த மனிதாபிமான குழுவில் ஒரு கமாண்டர் மற்றும் 49 பாதுகாப்பு உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர் என்று அவ்வறிக்கை சுட்டிக் காட்டியது.


