Homeசமூகம்முன்னாள் ஆர்.டி. எம் வானொலி &தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் எம். சுப்ரமணியம் காலமானார்! 

முன்னாள் ஆர்.டி. எம் வானொலி &தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் எம். சுப்ரமணியம் காலமானார்! 

கோலாலம்பூர், மார்ச் 29-முன்னாள் ஆர் டி எம் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் எம் .சுப்ரமணியம் இன்று காலமானார் .

உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று அதிகாலை 2.00 மணியளவில் காலமானார் . அவருக்கு வயது 83.

இவரின் நல்லுடல் நாளை காலை 10 மணியளவில் No 28 Jalan Dutamas seroja 4 taman segambut SPPK 51200 Kuala Lumpur எனும் முகவரியிருந்து செராஸ் மின்சுடலில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிக்கும் திறன் பெற்ற முன்னாள் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களில் சுப்ரமணியமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

spot_img

latest articles

explore more