Homeவர்த்தகம்வர்த்தகத்தில் நட்டம் ஏற்பட்டாலும் வருமான விவரத்தை அறிவிப்பீர்!வருமான வரி இலாகா நினைவுறுத்து

வர்த்தகத்தில் நட்டம் ஏற்பட்டாலும் வருமான விவரத்தை அறிவிப்பீர்!வருமான வரி இலாகா நினைவுறுத்து

கோலாலம்பூர், ஏப். 8-

தங்களின் வர்த்தகத்தில் நட்டம் ஏற்பட்டாலும் கூட தங்களின் வருமான விவரங்களை அறிவிக்கும்படி வரி செலுத்துவோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வர்த்தகத்தில் நட்டம் ஏற்பட்டால் வரி செலுத்தத்

தேவையில்லை என்று வரி செலுத்துவோரில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறாகும் என்று கோலாலம்பூர் உள்நாட்டு வருமான வரி துணை இயக்குநர் சைட் முகமது ஷூக்ரி சைட் முகமது கமில் கூறினார்.

“வர்த்தகத்தில் நட்டம் ஏற்படுவது வழக்கமாக நடப்பது தான். லாபமோ நட்டமோ ஒவ்வொரு வருடமும் உங்களின் வருமான விவரங்களை நீங்கள் கட்டாயம் அறிவிக்க வேண்டும். நட்டம் ஏற்பட்டிருந்தால் வருத்தப்படத் தேவையில்லை . வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது”என்று பெர்னாமா வானொலியில் ‘லாபமோ நட்டமோ கட்டாயம் ‘பி’பாரத்தை அனுப்ப வேண்டும் ‘எனும் தலைப்பிலான வரி கிளினிக் நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட்டார்.

தங்களின் வருமானம் குறித்து குறிப்பிட்ட காலத்திற்குள் அறிவிக்காமல் இருப்பது ஒரு குற்றம். இவர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்றார் அவர்.

இக்குற்றத்திற்காக 1967 ஆம் ஆண்டு வருமான வரி சட்டம் செஷன்ஸ் 112 (1)கீழ் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக 200 வெள்ளி முதல் 20,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது 6 மாத சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்றார் அவர்.

spot_img

latest articles

explore more