கோலாலம்பூர், ஏப். 14-நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவியின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும் என்று மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் வர்ணித்தார்.

மறைந்த துன் அப்துல்லா படாவி இந்தியர்களின் தேவைகளை ஒரு போதும் புறக்கணித்தது கிடையாது என்றார் அவர்.

அமைதியான,உன்னதமான ஆளுமை திறன்களைக் கொண்ட இவர் நல்லிணக்கம், வெளிப்படையான போக்கு போன்ற சமாதான சகாப்தத்தின் வழி சிறந்த நிர்வாகத்தை வெளிப்படுத்தினார் என்று தமது முகநூல் பக்கத்தில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவியின் குடும்பத்தாருக்கு ஒட்டுமொத்த மஇகா சார்பில் விக்னேஸ்வரன் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், முன்னாள் பிரதமர்களான துன் மகாதீர் முகமது, டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ‘பாக் லா’ என்றழைக்கப்பட்ட துன் அப்துல்லா படாவிக்கு தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினர்.

spot_img

latest articles

explore more