கோலாலம்பூர், ஏப். 15-நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவி காலமானார்.அவருக்கு வயது 85.
துன் அப்துல்லா அகமது படாவி காலமானதாக அவருடைய மருமகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுடின் தனது சமூக ஊடக பக்கம் வழி தகவலை பதிவு செய்தார்.
தேசிய இருதய சிகிச்சை கழகத்தில் (ஐஜேஎன்) சிகிச்சை பெற்று வந்த துன் அப்துல்லா அகமது படாவி நேற்றிரவு 7.10 மணிக்கு காலமானதாக அப்பதிவில் கைரி குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்று அறியப்படுகிறது.
துன் அப்துல்லா அகமது படாவி கடந்த 2003ஆம் ஆண்டு தொடங்கி 2009-ஆம் ஆண்டு வரை மலேசியாவின் ஐந்தாவது பிரதமராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


