கோலாலம்பூர், ஏப்.17-பொருளாதாரம் மற்றும் உடல் நிலை பாதிப்பு போன்ற சவால்களை எதிர்நோக்கியிருக்கும் ஊடக துறையைச் சேர்ந்த அறுவருக்கு இன்று “காசெ ஹவானா ” திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டது .
இந்த நிதியை தொடர்பு துறை அமைச்சர் டத்தோ ஃபாமி பாட்சில் இங்குள்ள அங்காசாபுரியில் நடைபெற்ற தமது அமைச்சின் ஹரிராயா கொண்டாட்ட நிகழ்ச்சியில் இந்த அறுவரிடம் வழங்கினார்.
மீடியா பிரிமா முன்னாள் நிருபர்கள் அய்டில் அப்துல் காஃபார்(57) மற்றும் மஸ்லின் நோர்டின் (58),காராங்கிராஃப் முன்னாள் நிருபர் ஜைலானி அகமது (60) மற்றும் த வைப்ஸ் முன்னாள் நிருபர் முகமது ஷாரிம் முகமது தம்பின்(50) ஆகியோர் ஆவர்.
இவர்களோடு மலேசிய கேஸட் ஒளிபரப்பு நிருபர் நூராயுனி ஜோகாரி (33) மற்றும் பெர்னாமா தொழில்நுட்ப பிரிவு தயாரிப்பாளர் நூர் அஜிசி அப்துல் காசிம் (54) ஆகியோரும் இந்த “காசெ ஹவானா” திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்ற அறுவரின் பட்டியலில் அடங்குவர்.
இந்நிகழ்ச்சியில் தொடர்பு துறை அமைச்சர் தியோ நீ சிங், அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ முகமது ஃபாவ்சி முகமது ஈசா, பெர்னாமா தலைவர் டத்தோஸ்ரீ வோங் சுன் வாய், இதன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் மற்றும் தலைமை ஆசிரியர் அருள் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.


