Homeகுற்றவியல்பேருந்து விபத்து: 36 இந்திய சுற்றுப்பயணிகள் உயிர் தப்பினர்.

பேருந்து விபத்து: 36 இந்திய சுற்றுப்பயணிகள் உயிர் தப்பினர்.

ஈப்போ, ஜூன் 20-

தஞ்சோங் மாலிம் அருகே வடக்கு நோக்கி செல்லும் Plus வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 396.2 இல், நேற்று மாலையில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததில், பயணிகள் பேருந்து ஒன்று சாலை தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது.

அதில், பயணித்த 36 இந்திய சுற்றுலா பயணிகளும் உள்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நேற்று மாலை 3.39 மணிக்கு நிகழ்ந்த அந்த விபத்தில், 41 வயது ஓட்டுநர் உட்பட அனைத்து பயணிகளும் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பித்ததாக முவால்லிம் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்ரிடெண்டன் முகமட் ஹஸ்னி மொகமட் நசிர் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் இருந்து ஈப்போவிற்கு செல்லும் வழியில் அப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, பாதையின் வலது பக்கம் நுழைந்து சாலை தடுப்பை மோதியுள்ளது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், அப்பேருந்து சாலையின் வலது பக்கத்தில் உள்ள கால்வாயின் மேல் பாய்ந்ததாகவும் அவர் கூறினார்.

அப்பேருந்தில் இருந்த இந்திய சுற்றுப்பயணிகளான 32 ஆடவர்களும் 4 பெண்களும், கோலாலம்பூரில் உள்ள ரீகாலியா ஹோட்டலில் இருந்து ஈப்போவில் உள்ள வெயில் ஹோட்டலுக்கு பயணித்ததாக நம்பப்படுகிறது.

அவர்கள் அனைவரும் மாற்று பேருந்தில், ஈப்போவுக்கு அனுப்பப்பட்டதாக, சூப்ரிடெண்டன் முகமட் ஹஸ்னி மொகமட் நசிர் கூறினார்.

 

spot_img

latest articles

explore more