Homeமலேசியாஅம்னோ நிலத்தை பெயர் மாற்றம் செய்வீர்! மகாதீர்& டாய்ம் குழுவினருக்கு நீதிமன்றம் உத்தரவு 

அம்னோ நிலத்தை பெயர் மாற்றம் செய்வீர்! மகாதீர்& டாய்ம் குழுவினருக்கு நீதிமன்றம் உத்தரவு 

கோலாலம்பூர், ஜூன் 26-

தற்போது தலைநகர் மையப் பகுதியில் ஸ்ரீ பசிபிக் ஹோட்டல் அமைந்திருக்கும் 9,723 சதுர மீட்டர் நிலமானது அம்னோவிற்குச் சொந்தமானது.

இதன் அறங்காவலர்களான துன் மகாதீர், துன் டாய்ம் ஸைனுடின், மூசா ஹீத்தாம் மற்றும் மறைந்த சனுசி ஜூனிட் ஆகியோரின் பெயரில் இந்த நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் டாய்ம் ஸைனுடினும் சனுசி ஜூனிட்டும் காலமாகி விட்டதால், சம்பந்தப்பட்ட நிலத்தை இன்னும் 30 நாள்களுக்குள் அம்னோவின் பெயருக்கு மாற்றித்தர வேண்டுமென்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவா ரோஸின் உத்தரவிட்டார்.

இதற்கு முன்னர், மேற்கண்ட நிலத்தை அம்னோவிற்குப் பெயர் மாற்றம் செய்ய முடியாது என்று மேற்கண்ட அம்னோ தலைவர்களில் ஓரிருவர் மறுத்து வந்ததாகத் தெரிகிறது.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more