Homeகுற்றவியல்விரைவு பேருந்து விபத்து: 20 பேர் காயமடைந்தனர்.

விரைவு பேருந்து விபத்து: 20 பேர் காயமடைந்தனர்.

கோலாலம்பூர், ஜூலை 5-

நெகிரி செம்பிலானின் நீலாயிலிருந்து பயணித்த விரைவு பேருந்து ஒன்று, நீலாய் – புக்கிட் மஹ்கோத்தா எல்லைபகுதிக்கு அருகில் உள்ள கனரக வாகனங்களுக்கான வழி தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது.

அதில், குறைந்தது 20 பேர் காயமடைந்தனர்.

அந்த விபத்து குறித்து, நேற்று இரவு 10.30 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பு கிடைத்ததாக, நீலாய் தீயணைப்பு மமீட்பு நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

“காயமடைந்தவர்களில் 19 பேர் மலேசியர்களாவர். ஒருவர் வெளிநாட்டவர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பேருந்தில் இருந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

நீலாய் மற்றும் பாங்கி தீயணைப்பு மீட்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தற்போது விசாரணையில் உள்ளதாகவும் அப்பேச்சாளர் கூறினார்.

spot_img

latest articles

explore more