Homeஅரசியல்அம்னோவில் மீண்டும் இணைய பரிசீலிப்பேன்!

அம்னோவில் மீண்டும் இணைய பரிசீலிப்பேன்!

கோலாலம்பூர், ஜூலை 6-

அம்னோவில் மீண்டும் இணைய வேண்டுமென்ற கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலேயின் வேண்டுகோளைத் தாம்  பரிசீலனை செய்யப்  போவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.

 கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்ட காரணத்தினால் 2022இல் கட்சியிலிருந்து 6 ஆண்டு காலத்திற்கு கைரி இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க் கட்சிகள் அவரை வளைத்துப் போடுவதில் மும்முரம் காட்டிய போதும், அவர் அதற்குச் செவி சாய்க்கவில்லை .

 கட்சியின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதனை நலிவிலிருந்து காப்பாற்ற, தமது சேவையை நாடியுள்ள இளைஞர் பிரிவிற்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 கட்சியிலிருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டவர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஆகியோரின் சேவைகள் நினைவுகூரத்தக்கவை.

ஆகையால், கருத்து வேறுபாடுகளைக் களைந்து, கட்சியில் மீண்டும் இணைய வேண்டுமென்று கைரி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செம்புரோங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேய்னை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டுமென்ற பரிந்துரையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

-பொன் முனியாண்டி

spot_img

latest articles

explore more