கோலாலம்பூர், ஜூலை 6-
அம்னோ தலைவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் கட்சி உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைமைச் செயலாளர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி எச்சரிக்கை விடுத்தார்.
தலைவர்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி ஊடகங்களின் வாயிலாக அவர்களுக்குத் தலைக் குனிவை ஏற்படுத்தி வரும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள கட்சி அனுமதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்ள, மக்கள் அதிகமாக வசிக்கும் நகர் பகுதிகளில் கட்சிக்கான முகப்புகளைத் திறந்து, பல்வேறு நலத் திட்டங்களை நடத்துவதன் மூலம் வாக்காளர்களின் ஆதரவைக் கட்சி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் வாஜ்டி டுசுக்கி தெரிவித்தார்.


