Homeசமூகம்சிலாங்கூரில் நெகிழிப் பைகளுக்குத்  தடை! 

சிலாங்கூரில் நெகிழிப் பைகளுக்குத்  தடை! 

கிள்ளான், ஜூலை 6-

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 12 ஊராட்சி மன்றங்களில் நெகிழிப் பைகளுக்கான தடைச் சட்டம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

பல தரப்பினருடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு, சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வருவதற்கான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது நெகிழிப் பைகளைத் தவிர்க்கும் நடவடிக்கை சிப்பாங்கில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் அடுத்து சபாக் பெர்ணத்தில் தொடங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more