Homeஅரசியல்பெரிக்காத்தான் நேஷனலுடன் மறைமுக பேச்சுவார்த்தை இல்லை! 

பெரிக்காத்தான் நேஷனலுடன் மறைமுக பேச்சுவார்த்தை இல்லை! 

கோலாலம்பூர், ஜூலை 21-

அம்னோ, பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து ஆட்சியைக் கவிழ்க்கும் வகையிலான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்று அம்னோவின் தலைவர்களில் ஒருவரான புவாட் ஸர்க்காஷி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், அப்படியொரு புதிய கூட்டணியை உருவாக்க அம்னோ தலைவர்கள் சிலர் பாஸ் கட்சியை அணுகியதாகக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அம்னோ தலைவர்கள் அம்மாதிரியான செயலில் ஈடுபட்டு மடானி அரசாங்கத்தைக் கவிழ்க்க முனைந்ததில்லை என்றும் பக்காத்தான் கூட்டணியில் கலகத்தை ஏற்படுத்தவே பாஸ் கட்சி முயற்சி செய்வதாகவும் எக்காரணத்தைக் கொண்டும் அம்னோ ஒற்றுமை அரசிலிருந்து விலகாது என்றும் ஸர்க்காஷி கூறினார்.

இதற்கு முன்னர் பாஸ் கட்சியுடன் சேர்ந்து பெரிக்காத்தான் ஆட்சியில் அம்னோ தகுந்த பாடத்தைக் கற்றுக் கொண்டதாகவும் இனிமேல் பாஸ் கட்சியோடும் பெரிக்காத்தான் நேஷனலோடும் ஒட்டும் இல்லை உறவும் இல்லையென்றும் அம்னோ எந்தக் காலத்திலும் பெரிக்காத்தான் நேஷனலோடு இணைந்து செயல்படாது என்றும் புவாட் ஸர்க்காஷி ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more