கிள்ளான், ஜூலை 22-

கிள்ளான் மாவட்ட தமிழ்ப் பள்ளிகளுக்கான கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் காப்பார் மெதடிஸ் தமிழ்ப் பள்ளி வெற்றி பெற்று டத்தோ மா. ஜெயப்பிரகாஷ் சவால் கிண்ணத்தை வாகைசூடியது.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தாங்கள் கலந்துகொண்ட ஒவ்வொரு ஆட்டத்திலும் காப்பார் மெதடிஸ் தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகள் குழுவினரும் மிகவும் சுறுசுறுப்பாக விளையாடி வெற்றிப் புள்ளிகளை எடுத்தனர்.

மாணவிகளுக்கான பிரிவில் நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ்பள்ளி இரண்டாவது இடத்தை பெற்றது. சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் கிள்ளான் வட்டாரத்திலுள்ள தாமான் செந்தோசா, காப்பார் வலம்புரோசா தோட்ட தமிழ்ப் பள்ளி, எமரல்ட் தோட்ட தமிழ்ப் பள்ளி, ஹைலண்ட்ஸ் தோட்ட தமிழ்ப் பள்ளி,
நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ்ப் பள்ளி, சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளி, காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப் பள்ளி, புக்கிட் ராஜா தோட்ட தமிழ்ப் பள்ளி, ஜாலான் ஆக்கோப் தோட்ட தமிழ்ப் பள்ளி, பத்து அம்பாட் தமிழ்ப் பள்ளி, வாட்சன் தமிழ்ப் பள்ளி ஆகிய பதினோரு தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்டன.

இந்த நிகழ்ச்சியில் கபடி தொழிட்நுட்ப அதிகாரி, கதிரவன் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இடைநிலைப் பள்ளிகள் பயிலும் பல்வேறு சமூகங்களைக் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் கபடி போட்டியை பரவலாக அறிமுகப்படுத்துவதோடு அதனை பிரபலப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட போடியில் ஏழு இடைநிலைப்பள்ளிக்ளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள்து திறனை வெளிப்படுத்தினர்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து கலந்துகொண்ட ஒட்டுமொத்த பிரிவில் காப்பார் துங்கு இட்ரிஸ் இடைநிலைப் பள்ளி வெற்றி பெற்று டத்தோ ஜெயப்பிரகாஷ் சவால் கிண்ணத்தை வென்றது. ஆண்கள் பிரிவில் கிள்ளான் ACS மெதடிஸ் இடைநிலைப்பள்ளி வெற்றி பெற்று சவால் கிண்ணத்தை வென்றது.

முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டிக்கு தமிழ்பபள்ளிகள் மட்டுமின்றி தேசிய இடைநிலைப் பள்ளிகளிலும் நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் தொடர்ந்து இப்போட்டியில் மேலும் அதிகமான பள்ளிகள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கியபோது ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார்.