Homeகுற்றவியல்பொலிடெக்னிக் மாணவி மரணம்: போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு

பொலிடெக்னிக் மாணவி மரணம்: போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு

19 வயது பொலிடெக்னிக் மாணவி எம். எலிசா ஜோனோவா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிடெக்னிக் சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா-வில், தளவாட மேலாண்மை மற்றும்  நிர்வாகத் துறையில் பயின்ற எம். எலிசா ஜோனோவா  செவ்வாய்க்கிழமை அதிகாலை குவாந்தானில் உள்ள ஜாலான் ஆயிர் புத்தே 2 பகுதியில் வாடகை அறையில் அவர் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டார்.

மாணவிக்கும் அவரது காதலருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடுமெ ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 4.32 மணியளவில் மாணவியின் காதலரிடமிருந்து அவசர அழைப்பு கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை முழுமையாக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாக JPPKK தெரிவித்துள்ளது.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அல்லது ஊகங்களை பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

@anegunnews

பாலிடெக்னிக் மாணவி மரணம்: போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு – JPPKK Polytechnic Student’s Death: JPPKK Leaves Investigation Fully to Police #anegunnews #anegunmedia

♬ original sound – AnegunNews – AnegunNews

spot_img

latest articles

explore more