பூர்வீகம் பரமகுடி என்றாலும்
பரம்பரை நட்பால் நீ பிறந்தது
பாரம்பரிய ராஜ அரண்மனையே..
அந்த ராஜயோகம்தான் உம்மை
இன்றும் ராஜ்ஜியம் செய்ய அழைக்கிறதோ..?
தொட்டதெற்கெல்லாம் அழும் உன்னை
அன்று சமாதானம் செய்ததெல்லாம்
அருகிலிருந்த தியேட்டர் வாசல்தான்..!
அங்கு 100 முறை பார்த்தாய்
எம்ஜிஆரின் மதுரைவீரன்…
என்பதாலோ என்னவோ இன்றுவரை
தமிழ் சினிமாவில் நீ ஒருவனே செயல்தீரன்..!
அப்படியே மனப்பாடம் சினிமா
அதனாலே உனது முதல் படம்
ஏவிஎமின் களத்தூர் கண்ணம்மா..!
ஜெமினிக்கு செல்லமானாய்…
பின்னர் சிவாஜிக்கு பிள்ளையானாய்…
உந்தன் முதல் படத்திலேயே
தேசிய விருதுக்கும் சொந்தமானாய்..!
படிப்படியே வளர்ந்தாய்…
அபூர்வ ராகங்களாய் மிளிர்ந்தாய்…
16 வயதினிலே தேர்ந்தாய்…
குருடாக செவிடாக முடமாக
வெவ்வேறு விதமாக நீ நடித்தாய்…
குருவாக மெதுவாக அதனாலே
கலைக்குள்ளே உன்னையே நீ ஜனித்தாய்..
சிவப்பு ரோஜாக்கள் தந்தது
ஒரு வில்லனை…
அதில் நினைத்தாலே இனிக்கும்
உன் கற்பனை…
டிக் டிக் டிக்கென நகர்ந்த நிமிடங்கள்
மந்திரத்தால் வெகுசீக்கிரம் தந்தது உனது
நூறாவது ராஜபார்வையை..!
80களில் நீயும் அலாவுதினின்
அற்புத விளக்குதான்..!
சப்பாணியாக இருந்து மூன்றாம் பிறை
சுப்பிரமணியாகி சகலகலா வல்லவனாய்..
எங்கள் இதயங்களில் இடம் பிடித்தாய்
புன்னகை மன்னனாய்…
வேலுநாயக்கர் நாயகனாய்..!
சத்தியாவைப் பார்த்து
கையில் காப்பு..
தேவர் மகனைப்போல
முடியில் பங்க்..
நம்மவர் போல ஓர் ஆசான்
நீ தொட்டதெல்லாம் அன்று
வெற்றிவிழா..!
தலைமுறை மாற சமூக கடப்பாடு
உன் குருதியில் புனல் கொண்டதால்
தேசத்தின் இந்தியன் ஆனாய்…
ஹேராமின் துப்பாக்கியாகி –
பாசமிகு அவ்வை சண்முகியுமானாய்..!
ஐந்தில் கால்வைத்ததால்
சினிமாவை பஞ்சதந்திரத்தால்
ஆளவந்தாய்..!
இன்றும் விழுந்து விழுந்து
எழுந்துக்கொண்டிருக்கின்றாய்…
பாமரத்து விருமாண்டியாய்..!
நாத்திகம் பேசும் மூளையை
அடிக்கடி ஆதிக்க சலவைசெய்வோம்..
நமக்குள் இருப்பதுவே கடவுள்
அன்பொன்றே சிவம்…
மற்றவையெல்லாம் சவம்…
உணர்த்திய மகாகலைஞன் நீ…!
உன்னைப் போல் ஒருவன்
தசவதாரம் எடுத்து…
இந்திய சினிமாவை ஆள்வதும்
கண்டங்கள் தாண்டி வளர்வதும்…
தமிழர்களுக்கே பெருமை..!
வீட்டில் எத்தனை சன்னல்கள்…
வேண்டுமாயின் பலமொழிகளாக இருக்கட்டும்
ஆனால் வாசலை மட்டும் தமிழுக்காக
வைத்துவிடுங்கள் என பேசிய தங்கத்மிழன் நீ…
உண்மைதான்… நீ பேசுவது
விளங்காது சமயத்தில்…
செல்லாது சில தருணத்தில்…
என்னதான் தெரியாது உனக்கு இன்றுவரை அது புரியாத வழக்கு..!
சொந்த வாழ்வில் எத்துயர்கொண்டாலும்
கலைஞானியாய் அத்தனையும்
அப்படியே விழுங்கி சாவாய் கலைக்காக..!
நான் நினைத்தால் முதல்வர் என்று
எம்ஜிஆருக்கு பிறகு
மேடையை மிகச் சரியாக பயன்படுத்திய
ஓர் அரசியல் கலைஞனும் நீதான்..!
கறைபடிந்து நிற்கும் சாக்கடையை
சுத்தம் செய்ய களமிறங்கி விட்டாய்…
உன்னைக் கைத்தட்டி பார்த்து ரசித்தகூட்டம்
இனி கைக்காட்டி எடுக்கும் நோட்டம்..!
யார் கண்டார்? தமிழக பூமி
அரசியலில்பார்க்குமோ
இன்னொரு மதுரைவீரனை..!
நீயே உனக்கு பலம்..
இதோ துணைக்கு வருகிறார் இன்னொரு
இந்தியன் தாத்தா…
பொருத்திருந்து பார்ப்போம்…
நாளைய நாட்களை….!
அதுவரை பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்சார்..!
அனேகன்.கோம்.


