Homeமலேசியாசிலாங்கூரின் சிறந்த பொருளாதார நிர்வகிப்பை பாராட்டிய டத்தோஸ்ரீ அன்வார்!

சிலாங்கூரின் சிறந்த பொருளாதார நிர்வகிப்பை பாராட்டிய டத்தோஸ்ரீ அன்வார்!

ஷா ஆலம், நவ. 8-
தனது நிர்வாகத்தில் பொருளாதார வளர்ச்சியை வித்திட்டுள்ளதோடு செலவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதோடு ஊழலை துடைத்தொழித்திருக்கும் சிலாங்கூர் அரசாங்கத்தின் அடைவுநிலையை பி.கே.ஆரின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாராட்டினார்.

இந்த அடைவுநிலையின் காரணமாக மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தாக்கல் செய்துள்ள 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருப்பதாக அவர் கூறினார். அஸ்மின் அலியின் நிர்வாகத்தின் வெற்றி கண்டுள்ள மாநில அரசாங்கம் மக்களுக்கு உதவுவதை அதிகரிக்க இலக்கு கொண்டிருப்பதோடு பொதுச்சேவை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதில் புதிய சாதனையையும் பதிவு செய்துள்ளது.

இந்த உதாரணமும் மூலதனமும் நாட்டில் உருமாற்றத்தை கொண்டு வருவதில் மக்களின் போராட்டத்திற்கு புதிய எழுச்சியை அளிக்கும் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார். கடந்த 3ஆம் தேதி ‘‘சமூகத்தை மேம்படுத்துவோம், மாநிலத்தை வளப்படுத்துவோம் எனும் கருப்பொருளில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி 3.12 பில்லியன் மதிப்பிலான 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார். அதில், 1.66 பில்லியன் (53.2 விழுக்காடு) நிதி மேம்பாட்டிற்கும் 1.46 பில்லியன் (46.8 விழுக்காடு) நிர்வாகத்திற்கும் செலவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

latest articles

explore more