Homeவிளையாட்டுசஃபிக் ரஹீம் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கக் கூடாது !

சஃபிக் ரஹீம் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கக் கூடாது !

கோலாலம்பூர், நவ.8 –

மலேசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் முடிந்ததும் தகாத வார்த்தகளில் ரசிகர்கள் மீது வசைப் பாடிய ஜோகூர் டாரூல் தாசிம் அணியின் கேப்டன் சஃபிக் ரஹீம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மலேசிய கால்பந்து சங்க ஒழுங்கு குழுவின் முன்னாள் தலைவர் கமரூடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இறுதி ஆட்டம் முடிந்ததும் இந்த சம்பவம் நடந்திருந்தாலும் , மலேசிய கால்பந்து சங்கத்தின் ஒழுங்கு குழு ஆட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவும், ஆட்டம் முடிந்தப் பிறகும் நடக்கும் சம்பவங்களை விசாரிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

எனினும் இறுதி ஆட்டத்தின் முழுமையான அறிக்கைக்கு தமது தரப்பு காத்து கொண்டிருப்பதாக மலேசிய கால்பந்து சங்க ஒழுங்கு குழுவின் தலைவர் டத்தோ பல்ஜிட் சிங் சித்து தெரிவித்திருப்பதை தாம் வரவேற்பதாகவும் அவர் சொன்னார்.

சஃபிக் ரஹீம்மின் செயல் கால்பந்து விளையாட்டிற்கு இழுக்கு ஏற்படுத்தும் ஒரு செயல் என்பதால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கமரூடின் தெரிவித்தார். அபராதம், அல்லது ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் பகாங் ஆட்டக்காரர் ஷாமின் யாஹ்யா, ஆபாச சைகையை காட்டியதால் ஓர் ஆட்டம் தடை மற்றும் 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதை அவர் சுட்டி காட்டினார்.

spot_img

latest articles

explore more