மலாக்கா,நவ 8-
மாநில போதைப்பொருள் தடுப்பு இலாகா அதிகாரிகள் மேற்கொண்ட ஒப்ஸ் பெர்டானா சோதனையில் 54 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் இந்திய ஆடவர்களும் நால்வர் அடங்குவர். குருபோங் மேம்பாலத்திற்கு அடியில் காலை மணி 6 க்கு மேற்கொண்ட அதிரடி சோதனையில் இவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பிடிப்பட்டனர்.
சிலர் போதைப்பொருளை உட்கொண்டு மயக்க நிலையில் காணப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் 19 முதல் 41 வய்துக்கு உட்பட்டவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. லுட் சினார் மற்றும் ஹேரோயின் வகை போதைப்பொருள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் விசாரணைக்காக அலோர்காஜா மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுள்ளதாகவும் உடனடியாக சிறுநீர் பரிசோதனை மேற்கொள்வதாக மாநில போதைப்பொருள் தடுப்பு இலாகாவின் துணை இயக்குநர் நோர் அஸ்மி பின் சாத்தார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


