முகப்பு > கலை உலகம் > தில்லானா ஆட்டத்தின் மாபெரும் அரையிறுதிச் சுற்று பிரமாண்டமாக நடைபெற்றது
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தில்லானா ஆட்டத்தின் மாபெரும் அரையிறுதிச் சுற்று பிரமாண்டமாக நடைபெற்றது

மலாக்கா, நவ. 8-

தில்லானா ஆட்டத்தின் அரையிறுதிச் சுற்று மக்கோத்தா பிரேட் பேரங்காடியின் பிரதான அரங்கில் மிகச் சிறப்பான முறையில் மக்கள் கைத்தட்டலுடன் விமரிசையாக நடைபெற்றது. தில்லானா நடனக்குழுவின் வருடாந்திர நிகழ்வானது வழக்கம்போல் பொதுமக்களின் வற்றாத ஆதரவுடன் நாடு முழுவதும் சுமார் 16 குழுக்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் இப்போட்டியில் கலந்து சிறப்பித்தனர்.

கிராமியமும் மேற்கத்திய இசையும் கலந்த வகையில் ஒரு முழு பாடலுக்கு இவர்கள் அபிநயம் பிடிக்க வேண்டும். சுமார் 5 நிமிடம் நடனமாடும் இவர்களது மேடைப்படைப்பாற்றல்,உடையலங்காரம் போன்ற பல்வேறு கோணங்களில் புள்ளிகள் வழங்கப்பட்டது.

நாடறிந்த புகழ்பெற்ற நடன இயக்குநர் அகோந்திரன் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.அனைத்து படைப்புகளும் அரங்கேறிய பிறகு நீதிபதி அவர்கள் மிகச் சிறந்த 7 குழுக்களை இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுத்தார்.

வெகுவிரைவில் மாபெரும் இறுதிச்சுற்று மலாக்கா மாநகரிலேயே நடைபெறவுள்ளதாக தில்லானா நடனக்குழுவின் தலைமைச் செயல்முறை அதிகாரி தில்லைநாதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் காத்திருப்பதாக தில்லைநாதன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன