Homeமலேசியாமுதலில் அன்வாரை விடுதலை செய்யுங்கள்! அம்பிகா சீனிவாசன்

முதலில் அன்வாரை விடுதலை செய்யுங்கள்! அம்பிகா சீனிவாசன்

கோலாலம்பூர், நவ.18-

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் தனது வலது தோள்பட்டையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையினால் ஓய்வெடுத்துவரும் பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சந்தித்ததை சரி என பலர் கூறுவது ஏன் என தெரியவில்லை பெர்சே 2.0-இன் முன்னாள் தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் தெரிவித்தார்.

அவரை துன்புறுத்திவிட்டு இப்போது அதனால் அவர் சிரமப்படும் போது அவரை (அன்வார்) சந்திக்கிறீர்கள். முதலில் அன்வாரை விடுதலை செய்யுங்கள். அதன் பிறகு நாம் பேசுவோம் என தனது டூவிட்டர் பக்கத்தில் அம்பிகா பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் பிரதமர் நஜீப்பின் பெயரை குறிப்பிடாவிட்டாலும் அம்பிகா பிரதமரிடம்தான் இக்கோரிக்கையை வைத்துள்ளதாக தெரிகின்றது.

spot_img

latest articles

explore more