Homeவிளையாட்டுஅர்செனல் ஆட்டத்தரத்தில் ஏமாற்றம் அடைந்தேன் - வெங்கர்!

அர்செனல் ஆட்டத்தரத்தில் ஏமாற்றம் அடைந்தேன் – வெங்கர்!

லண்டன், ஜன.19  –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் அர்செனல் வெளிப்படுத்தி வரும் ஆட்டத்தரத்தில் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக நிர்வாகி ஆர்சன் வெங்கர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த பருவத்தின் இறுதியில் முடிவடையவுள்ள தமது ஒப்பந்தத்தை தாம் நீட்டிக்காமல் போகலாம் என வெங்கர் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி லீக் ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலசை வீழ்த்திய அர்செனல் அதன் பின்னர் நடைபெற்ற மூன்று லீக் ஆட்டங்களில் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றது. அதேவேளையில் எப்.ஏ கிண்ண போட்டியில் நோட்டிங்ஹம் புரோஸ்ட் அணியிடம் தோல்வி கண்டது. அர்செனல் அணி தற்போது எதிர்நோக்கியுள்ள பின்னடைவால், ஆர்சன் வெங்கர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆக கடைசியாக 2004 ஆம் ஆண்டில் பிரீமியர் லீக் பட்டத்தை வென்ற அர்செனல் கடந்த 14 ஆண்டுகளாக லீக் பட்டத்தை வெல்லவில்லை. 2018 ஆம் ஆண்டின் தொடக்கம் அர்செனலுக்கு சிறப்பாக அமையவில்லை என்பதை தாம் ஒப்பு கொள்வதாக வெங்கர் தெரிவித்தார்.

ஆனால் கால்பந்து நிர்வாக பொறுப்பில் தமக்கு 30 ஆண்டுகள் அனுபவம் இருப்பதால் நிச்சயம் அதற்கான தீர்வையும் முன் வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். ஜனவரி 31 ஆம் தேதிக்குள் மேலும் சில ஆட்டக்காரர்களை வாங்குவதன் மூலம் அர்செனல் அணியில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என தாம் நம்புவதாக வெங்கர் தெரிவித்துள்ளார்.

spot_img

latest articles

explore more