Homeமலேசியாமுன்னாள் கால்பந்து ஆட்டக்காரர் வி.கிருஷ்ணசாமிக்கு யாக்கேப் உதவி !

முன்னாள் கால்பந்து ஆட்டக்காரர் வி.கிருஷ்ணசாமிக்கு யாக்கேப் உதவி !

ஜார்ஜ்டவூன், ஜன.19 –

நீரிழிவு நோயால் அவதியுற்று வரும் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் ஆட்டக்காரர் வி.கிருஷ்ணசாமிக்கு, யாக்கேப் எனப்படும் தேசிய விளையாட்டாளர்கள் சமூகநல அறவாரியம் உதவி வழங்க முன் வந்துள்ளது. 69 வயதுடைய கிருஷ்ணசாமி கடந்த ஓராண்டாக நீரிழிவு நோயால் அவதியுற்று வரும் வேளையில் காலின் கட்டை விரலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தாம் மருத்துவரை சந்தித்ததாகவும் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு தமக்கு நீரிழிவு நோய் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் யாக்கேப்பின் தலைமை நிர்வாகி அதிகாரி சுஹாய்ரி அப்துல் மானாப், முன்னாள் கால்பந்து ஆட்டக்காரர் டத்தோ சுக்கோ சாலே, ஆகியோர் வியாழக்கிழமை கிருஷ்ணசாமியை சந்தித்து உதவிகளை வழங்கினர்.

1972 ஆம் ஆண்டில் மூனிக் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்ற கால்பந்து அணியில் கிருஷ்ணசாமியும் இடம்பெற்றிருந்தார். அவருக்கு தொடக்க கட்டமாக 500 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. வெளிநோயாளிக்கான பிரிவில் மாதந்தோறும் 2, 500 ரிங்கிட்டும் மருத்துவ செலவுகளுக்காக 20 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய உதவிகளையும் பெறுவதற்கு கிருஷ்ணசாமி தகுதி பெற்றுள்ளதாக சுஹாய்ரி தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more