Homeமலேசியாகிரகண விவகாரம்: டத்தோ சரவணனின் பேச்சு அழகல்ல! டத்தோ வைத்தியலிங்கம்

கிரகண விவகாரம்: டத்தோ சரவணனின் பேச்சு அழகல்ல! டத்தோ வைத்தியலிங்கம்

கோலாலம்பூர், ஜன.19-

சந்திர கிரகணம் தொடர்பில் அருண் துரைசாமி என்பரைப் பற்றி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் வாட்சாப் எனப்படும் சமூகவலைத்தளத்தில் பேசியிருப்பது அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும் ஒருவருக்கு அழகல்ல என மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ வைத்தியலிங்கம் தெரிவித்தார்.

ஒரு துணையமைச்சர் என்ற முறையில் அவர் அருணை அழைத்து விளக்கத்தை நல்ல முறையில் கேட்டிருக்கலாம். தைப்பூசத்திற்கு பத்துமலைத் திருத்தலத்தைப் புறக்கணிக்க வேண்டுமென அருண் கூறியது தவறுதான். ஆனால், அதைத் தவிர்த்துவிட்டு அவர் கூறிய மற்றக் கருத்துகள் ஏற்புடையதாகும் என அவர் கூறினார்.

இந்நாட்டில் மதமாற்று விவகாரம் உள்பட இந்து சமயம் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் அருண் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை டத்தோ சரவணன் கடுமையாக பேசியதற்கு பதில் அவரை அழைத்து டத்தோ சரவணன் முறையான வழியில் விளக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், சந்திர கிரகண காலத்தில் ஆலயங்களைப் புறக்கணிக்க வேண்டுமென நாங்கள் ஒரு போதும் வலியுறுத்தியதில்லை. மாறாக, அந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே ஆலய நடையை மூடும்படி கூறுகிறோம் என இன்று மலேசிய இந்து சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்து அமைப்புகளுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டத்தோ வைத்தியலிங்கம் மேற்கண்டவாறு கூறினார்.

spot_img

latest articles

explore more