அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > சிறந்த மதிப்பெண்களைப் பெற உறுதி செய்யும் ‘ஏஆர் பிந்தார் டியூஷன்!
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

சிறந்த மதிப்பெண்களைப் பெற உறுதி செய்யும் ‘ஏஆர் பிந்தார் டியூஷன்!

டாமன்சாரா, ஜன. 19-

ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு டாமன்சாராவில் இயங்கும் ‘ஏஆர் பிந்தார் டியூஷன்’ மையம் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு உறுதுணையாக அமைவதோடு கனவு மெய்ப்பட வழிகாட்டுகிறது என்கிறார் அதன் நிறுவனர் இளைஞர் கதிரேசன் மதியழகன்.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு டியூஷன் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. சில மாணவர்கள் டியூஷன் செல்வதால் சிறந்த மதிப்பெண்களைப் பெற முடிகிறது என்று கூறுகின்றனர். இது மறுப்பதற்கில்லை. அதுபோல, தற்போது டாமன்சராவில் இயங்கும் ‘ஏஆர் பிந்தார் டியூஷன்’ மையம் மாணவர்களுக்கு ஒளியைத் தரக்கூடிய ஒரு டியூஷன் மையமாக உருவெடுத்துள்ளது.

ஆரம்பப் பள்ளியில் 4,5,6ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நமது டியூஷன் மையம் ஒரு வித்தியாசமான கல்வி கூடமாகத் திகழ்கிறது எனலாம். பள்ளித் தவணை தொடங்கி ஏறக்குறைய மூன்றாவது வாரத்தில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இன்றைய மலேசிய கல்வி பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றால் மறுப்பவர் எவரும் இலர்.

‘ஏஆர் பிந்தார் டியூஷன்’ மையத்தில் இணையும் மாணவர்கள் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, அவர்களின் பயணத்தை சிறந்த மதிப்பெண் பெறும் ஒரு வெற்றிப் பயணமாக மாற்றும் ஆற்றல் கொண்டது என்று உறுதியுடன் கூறுகிறார் இளம் வயதிலேயே சொந்த முயற்சியில் டியூஷன் மையத்தைத் தொடங்கிய கதிரேசன்.

சிறுவயதிலேயே எனது தாயாரை இழந்துவிட்டேன். அன்றிலிருந்து அன்னைக்கு அன்னையாகவும் தந்தைக்குத் தந்தையாகவும் என்னை வளர்த்த என் அன்புத் தந்தைக்கு இந்த டியூஷன் மையத்தைக் காணிக்கையாக்குகிறேன். அன்று தொடங்கி இன்று வரை எனது துன்பத்திலும் இன்பத்திலும் பக்கத்தில் இருந்து வழிகாட்டி வருகிறார். இவ்வேளையில் அவருக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன் என ‘ஏஆர் பிந்தார் டியூஷன்’ மையத் திறப்புவிழாவின்போது மிக உருக்கமாக கதிரேசன் கூறினார்.

ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்குப் படும் சிரமங்களை நான் நன்றாக அறிவேன். காரணம், சிறு பிராயத்தில் நானும் இதுபோன்ற இன்னல்களைக் கடந்து வந்திருக்கிறேன். எனவேதான், சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று திட்டமிட்டேன். அதன்படி, அருகிலுள்ள எஃபிங்காம் தமிழ்ப்பள்ளியில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு மிகக் குறைவான கட்டணத்தில் அல்லது இலவசமாக டியூஷன் வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளேன். பல்வேறு தரப்பினரின் ஆலோசனைக்கு ஏற்ப இந்தத் திட்டம் மிக விரைவில் முழுவடிவம் காணும் என்று சமுதாயத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தினார் கதிரேசன்.

‘ஏஆர் பிந்தார் டியூஷன்’ மையத்தைப் பொறுத்தவரை மிகவும் நேர்த்தியாக மாணவர்களைக் கவரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு இணையும் மாணவர்களுக்கு இலவசப் பொருள்களும் வழங்கப்படுகின்றன.

அதோடு, இங்குள்ள வகுப்பறைகளைக் காணும்போது, மாணவர்களிடையே ஒருவித புத்துணர்ச்சி ஏற்படும் என்று உறுதியாகக் கூற முடியும். அந்த அளவிற்கு மாணவர்களின் உள்ளுணர்வுகளை ஆராய்ந்து வகுப்பறைகள் வடியமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வகுப்பறைகள் தொடர்பான உணர்வுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நேரடியாக ‘ஏஆர் பிந்தார் டியூஷன்’ மையத்திற்கு இன்றே வருகை புரியுங்கள் என்று அன்பான அழைப்பு விடுக்கிறார் கதிரேசன் மதியழகன்.

ஆரம்பப் பள்ளி மட்டுமின்றி படிவம் 1 தொடங்கி படிவம் 5 வரைக்குமான வகுப்புகளும் இங்கு போதிக்கப்படுகின்றன. இடைநிலைப்பள்ளியில் சிரமத்தை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு நேரடியாக ‘ஏஆர் பிந்தார் டியூஷன்’ மையம் நிச்சயம் சிறந்த வழியை அமைத்துக் கொடுக்கும் ஒன்றாகவே அமையும்.
நமது ஆசிரியர்கள் மிகவும் தரம் வாய்ந்தவர்கள். மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்களே இங்குப் போதனை ஆசிரியர்களாக விளங்குகின்றனர். நேரடியாக ‘ஏஆர் பிந்தார் டியூஷன்’ மையத்தில் இணைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களது பெற்றோர்களை அழைத்து வந்து விவரம் கேட்கலாம். அதோடு, பரிட்சார்த்த முறையிலான வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம். வகுப்புகளில் ஆர்வம் கொள்ளும் மாணவர்கள் உடனே தங்களைப் பதிந்து கொள்ளலாம்.

கட்டணம் தொடர்பான கவலை உங்களுக்கு இருக்காது. காரணம், நமது கட்டணம் மாணவர்களுக்கு சேவை அடிப்படையிலானது. மற்ற டியூஷன் வகுப்புகளைக் காட்டிலும் நமது கட்டணம் மாறுபட்டுதான் இருக்கும். நம்புங்கள்… உடனே பதியுங்கள் என்று தமது நம்பிக்கை வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார் இளம் வயதிலேயே வெற்றிபெற்ற இளைஞராக வலம் வரும் கதிரவன்.

யூபிஎஸ்ஆர் (UPSR), பிடி3 (PT3), எஸ்பிஎம் (SPM), ஐஜிசிஎஸ்இ (ICGSE) தேர்வுகள் தொடர்பான நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ள ‘ஏஆர் பிந்தார் டியூஷன்’ மையம் உங்களுக்காக வழங்க காத்திருக்கிறது. எங்களால் உடனே வர இயலாது என்று சொல்பவர்கள் 011-11466227, 011-11466247, 010-4016476 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Pusat Tuisyen AR Pintar என்ற ஃபேஸ்புக் கணக்கின் வாயிலாகவும் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்குத் தோன்றும் கேள்விகளுக்குப் பதிலளிக்க நாங்கள் தயார். எங்களுடன் இணைந்து வெற்றிப் பயணத்தை உருவாக்கிக் கொள்ள நீங்கள் தயாரா? உடனே ‘ஏஆர் பிந்தார் டியூஷன்’ மையத்துடன் இணையுங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன