திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > சமூக சிந்தனையுடன் பயின்றால் தலைவன் ஆகலாம்! – கோபிநாத் பேச்சு
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

சமூக சிந்தனையுடன் பயின்றால் தலைவன் ஆகலாம்! – கோபிநாத் பேச்சு

ஷா ஆலம், பிப். 11-

எதை முடியாது என்கிறோமோ அதை முடித்துக் காட்டுவதுதான் வாழ்க்கையின் வெற்றி. உங்கள் பிள்ளைகளைச் சுயமாக சிந்திக்க விடுங்கள். மற்ற பிள்ளைகளோடு காலம் முழுவதும் ஒப்பிட்டு பேசிப்பேசி உங்கள் பிள்ளைகளைக் கேவலப்படுத்தி வீட்டில் விடாதீர்கள். பேசினால், இழப்புதான் மிஞ்சும் என ஸ்டார் விஜய் தொலைக்காட்சி புகழ் கோபிநாத் அரங்கம் அதிர பேசினார்.

மலேசிய ஸ்ரீ முருகன் நிலைய ஏற்பாட்டில் ஐசிட்டி மிட்லண்ஸ் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற தன்முனைப்பு கருத்தரங்கில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நீயா நானா புகழ் கோபிநாத் கல்வி யாத்திரையின் பெருமைகளைப் பற்றி 2 மணி நேரம் அசராமல் பேசினார்.

கல்வித்துறையில் மேலை நாடுகளில் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்துள்ளார்கள், விஞ்ஞான அறிவியல் துறையிலும் பெயர் சொல்லும் அளவிற்குத் தலைமைத்துவத்தில் தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆண்டவன் கொடுத்த திறமை அனைவருக்கும் இருக்கின்றது அதனை நல்லமுறையில் பயன் படுத்திக் கொண்டவர்கள் வாழ்வில் வெற்றியடைகின்றார்கள்.

இன்று இந்த நாட்டில் ஸ்ரீ முருகன் நிலையத்தார் கல்விக்கு மிக முக்கியத்துவம் தந்து பிள்ளைகளை தத்தெடுத்து அவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பங்காற்றி வருவது மிகவும் பாராட்டுதலுக்குரிய செயலாகும். கடந்த 36 ஆண்டுகளாக ஸ்ரீ முருகன் 27,000 இளம் பட்டதாரிகளை உருவாக்கியிருப்பது பாராட்டத் தகுந்த செயலாகும். இந்திய சமுதாயம் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் இருப்பதினால்தான் இந்த கல்வி இயக்கம் வெற்றி பெற்றுள்ளது என துணிவாகச் சொல்லலாம். அண்டவன் கொடுத்த திறமை அனைவருக்கும் இருக்கின்றது.

பள்ளியில் படிக்கின்ற படிப்பை வைத்து அங்கு அவர்கள் வாங்கும் மதிப்பெண்களை வைத்து அவர்களின் அறிவுத் திறனை எடை போடாதீர்கள். தாய் தந்தையினரின் கடமை, பிள்ளைகள் விழுந்தால் எழுவதற்கு துணை நிற்கவேண்டும்; பழகிக் கொடுக்கவும் ஆறுதல் மொழி கூறவும் வேண்டும். இனியும் அடுத்தவனுக்கு கைகட்டி வாழ்ந்து போதும் நீங்களே வெற்றியாளனாக மாறுங்கள்.

அரங்கத்தில் உள்ளோர் சொக்கி நின்று அவர் பேச்சைக் கேட்டனர்.ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் கல்வி பயின்ற மாணவி தர்சினி தனித்து வாழும் தாயுடன் இருப்பதால் உயர்கல்வியைத் தொடர முடியாமல் போவதாகவும், வெறும் தாதியர் பயிற்சியுடன் முடித்துக்கொள்ள எண்ணிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், ஸ்ரீ முருகன் நிலையத்தில் உள்ள புரட்சிக்குழுவினர் தர்சினி குடும்பத்தைக் கண்டறிந்து தமக்கு ஆதரவளிப்பதாகக் கூறி வீட்டுக்கு வந்ததாகவும் அவர்களே எங்கள் பாழடைந்த வீட்டடையும் புதியதாக செப்பனிட்டு கொடுத்ததாக தர்சினி தெரிவித்தார்.

மேலும் தான் டாக்டர் துறைக்கு படிக்க விரும்புவதாகக் கூறிய போது சட்டென்று எழுந்து வந்த ஸ்ரீ முருகன் கல்வி நிலைய தந்தை டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் தம்பிராஜா அதற்கான எல்ல செலவுகளையும் தாம் ஏற்பதாக உறுதி மொழியை பெருத்த கையொலிக்கிடையே கூறினார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஞான சத்ரியா கூட்டத்தில் கலந்துகொண்ட அறங்காவலர் டத்தோ டாக்டர் புரவியப்பன். ஸ்ரீ முருகன் நிலையத்தின் முன்னோடித் தலவர் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி, ஸ்ரீ முருகன் இயக்குநர் சுரேந்திரன், பிரகாஷ் ராவ், டத்தோ டாகடர் குமாரராஜா, கிள்ளான் ஸ்ரீ முருகன் ஒருங்கிணைப்பாளர் அரவிந் மற்றும் டத்தோ கோகிலன் பிள்ளை ஆகியோருடன் 2,000க்கு மேற்பட்ட பெற்றோர்களும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன