மாஸ்கோகோவில் விமான விபத்து! 71 பேர் பலி

மாஸ்கோ, பிப். 11-

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே பயணிகள் விமானம் நொறுங்கியது. இதில் பயணித்த 71 பேரும் உயிரிழந்ததாக டெய்லி மெயில் இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மாஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71 பேருடன் நடுவானில் நொறுங்கி விபத்துக்குள்ளானது.

பயணத்தை தொடங்கிய 10ஆவது நிமிடத்தில் இந்த விமானம் வானத்தில் வெடித்துச் சிதறியது. இவ்விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் தீயில் கருகி மாண்டனர்.

விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பயணம் செய்த 71 பேரில் 65 பேர் பயணிகள் மற்ற 6 பேர் விமான ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.