வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஆசிரியையின் கைப்பேசியை வசந்தபிரியா எடுத்ததாக கூறப்படுவதைப் போலீஸ் மறுத்தது!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஆசிரியையின் கைப்பேசியை வசந்தபிரியா எடுத்ததாக கூறப்படுவதைப் போலீஸ் மறுத்தது!

புத்ராஜெயா, பிப்.12-
அண்மையில் மரணமடைந்த மாணவி எம்.வசந்தபிரியாதான் ஆசிரியையின் ஐபோன் 6 கைப்பேசியைத் திருடியதற்கான சிசிடிவி காமேரா பதிவு இருப்பதாக கூறப்படும் தகவலை பினாங்கு போலீஸ் திட்டவட்டமாக மறுத்தது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை இன்னமும் நடைபெற்று வருவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஏ.தெய்வீகன் தெரிவித்தார்.

முன்னராக, சம்பந்தப்பட்ட மாணவி ஆசிரியையின் கைப்பேசியைத் திருடியதற்கான சிசிடிவி காமேரா பதிவு இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு சொன்னார்.

சம்பந்தப்பட்ட காமேரா பதிவு தெளிவில்லாமல் உள்ளதால் அதில் ஆசிரியையின் கைப்பேசியை யார் திருடியது என்பதை போலீசால் உறுதி செய்ய முடியவில்லை. ஆகையால், சம்பந்தப்பட்ட காணொளியைத் தெளிவுப்படுத்துவதற்கு தடயவியல் நிபுணர்களின் உதவி தேவைப்படுகின்றது. ஆகையால், தற்போது இது குறித்து நாங்கள் கருத்துரைக்க முடியாது.

மேலும், இப்போது இது பற்றி யார் என்ன எழுதினாலும் கூறினாலும் அது உறுதிபடுத்தப்படாதது ஆகும். சம்பந்தப்பட்ட காணொளி தொடர்பில் போலீஸ் வசந்தபிரியாவின் பெற்றோர், நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள் முதலானோரை விசாரணைக்கு அழைத்துள்ளது. இதுவரையில் சுமார் 30 சாட்சியாளர்களைப் போலீஸ் அழைத்துள்ளதாக தெய்வீகன் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன