கொச்சின் , பிப்.13 :
ஒவ்வொரு வாரமும் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயம் செம ட்ரெண்டாகி வருகிறது. ஜிமிக்கி கம்மல் உலகளவில் வைரலானதைத் தொடர்ந்து சமீபத்திய ‘பக்கோடா’ வரை பல விஷயங்களையும் நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர்.
அந்த வகையில், லேட்டஸ்ட் வைரல் பிரியா பிரகாஷ் வாரியர். ‘ஒரு அடார் லவ்’ படத்தில் நடித்திருக்கும் பிரியாதான் ரசிகர்களின் லேட்டஸ்ட் வாவ் பொண்ணு!

ஒரு அடார் லவ்’ படத்தின் ‘மாணிக்க மலராய பூவி’ பாட்டு சமீபத்தில் வெளியானது. பெரிய நடிகர்கள் நடிக்காத இப்படத்தில், இந்தப் பாடலின் வீடியோவை இதுவரை 44 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசையில் இப்பாடலை வினீத் பாடியுள்ளார்.
இந்தப் பாடலை இத்தனை வைரல் ஆக்கியது, நடிகை பிரியா பிரகாஷின் அழகான முக பாவனைகள்தான். இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள் பலரையும் கவர்ந்தது. சமூக வலைதளங்களில் பிரியா பிரகாஷுக்கு பல ரசிகர் பக்கங்கள் வளர தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை ஷேர் செய்துள்ளார் பிரியா.

ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவையும் பிரியா பிரகாஷ் பகிர்ந்துள்ளார். அதில், தனக்கு சிறு வயதிலிருந்து நடிப்பதற்கு ஆசையெனவும், ‘சங்க்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் 12-ம் வகுப்பில் இருந்த காரணத்தால் தன்னால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லையென்றும் கூறியுள்ளார்.
அதன்பிறகே, ‘ஒரு அடார் லவ்’ படத்தில் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார். பிரியா வாரியரின் ரியாக்ஷனுக்கு ரசிகர்கள் குவிகிறார்கள். அவரது புகைப்படங்கள் தற்போது அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறார் பிரியா.


