Homeவிளையாட்டுஸ்பெயின் லா லீகா - கெத்தாப்பேவுடன் சமநிலைக் கண்ட பார்சிலோனா!

ஸ்பெயின் லா லீகா – கெத்தாப்பேவுடன் சமநிலைக் கண்ட பார்சிலோனா!

பார்சிலோனா, பிப்.12 –
ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா கோல் ஏதுமின்றி கெத்தாப்பேவுடன் சமநிலைக் கண்டது. தொடர்ந்து இரண்டாவது வாரமாக பார்சிலோனா வெற்றி பெற தவறியுள்ளது. கடந்த வாரம் எஸ்பான்யோலுடன் சமநிலைக் கண்ட பார்சிலோனா தற்போது கெத்தாப்பேவுடன் சமநிலைக் கண்டிருக்கிறது.
எனினும் இந்த பருவத்தில் ஸ்பெயின் லா லீகா போட்டியில் நடைபெற்ற 23 ஆட்டங்களிலும் பார்சிலோனா தோல்வி காணவில்லை என்பது குறிப்பிடதக்கது. கெத்தாப்பேவுக்கு எதிராக முதல் பாதியில் பார்சிலோனாவின் லுவிஸ் சுவாரேஸ் போட்ட கோலை நடுவர் அங்கீகரிக்கவில்லை. சுவாரேஸ் ஒப்சைட் நிலையில் இருந்ததால் அந்த கோல் கணக்கில் கொள்ளப்படவில்லை.
2016 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்துக்குப் பின்னர் பார்சிலோனா முதல் முறையாக நூ கேம்ப் அரங்கில் கோல் போட தவறியுள்ளது.  மலாகாவுக்கு எதிராக வெற்றி பெற்ற அத்லேட்டிக்கோ மெட்ரிட்டைக் காட்டிலும் பார்சிலோனா தற்போது வெறும் ஏழு புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே முதலிடத்தில் உள்ளது.
spot_img

latest articles

explore more