Homeசமூகம்பிப்.17இல் மலேசிய நால்வர் மன்றத்தின் தமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018

பிப்.17இல் மலேசிய நால்வர் மன்றத்தின் தமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018

கோலாலம்பூர், பிப்.12-
மலேசிய நால்வர் மன்றத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக தமிழ் மறையாம் திருமுறை மாநாடு நடைபெறவுள்ளது. நால்வர் காட்டிய பெருநெறி எனும் கருப்பொருளுடன் திருமுறை மாநாடு வருகின்ற 17ஆம் தேதி சனிக்கிழமை காலை மணி 8.00 அளவில் பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் ஸ்கோட்டிலுள்ள கலா மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக அம்மன்றத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் கந்தசாமி தெரிவித்தார்.

தமிழ் என்ன செய்யும் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இம்மாநாடு அதற்கான விளக்கங்களையும் தமிழ் எல்லாம் செய்யும் என்பதை விளக்கும் களமாகவும் இம்மாநாடு அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. திருமுறை சிந்தனைகளை மக்கள் வாழ்க்கையில் வளப்படுத்துதல், திருமுறை நெறிகளை அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துதல், நால்வர் காட்டிய தமிழ் மொழி பண்பாடு மற்றும் கலாச்சார கூறுகளை மக்களிடையே பரப்புதல், திருமுறைகளை அன்றாட வாழ்க்கையிலும் வழிபாட்டு மந்திரங்களாக ஏற்றுக் கொண்டு செயல்படுத்துதல், பங்கேற்பாளர்களிடையே நல்ல தொடர்பையும் உறவு பாலத்தையும் உருவாக்குதல் என்ற 5 முக்கிய நோக்கங்களுடன் இந்த மாநாடு நடத்தப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

தவத்திரு பாலயோகி சுவாமிகள் ஆசியுரையுடன் நடைபெறும் இம்மாநாட்டை இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதின தவத்திரு திருச்சிற்றம்பலம் தம்பிரான் அடிகள், பேராசிரியர் செந்தமிழரசு சிவகுமார் ஆகியோர் பல முக்கிய தலைப்புகளில் பேருரை ஆற்றவுள்ளனர். தமிழக சேக்கிழார் மன்ற செயலாளர் சிறப்பு விருந்தினராக பார்த்திபன் கலந்துக்கொள்ளவிருக்கிறார்.

ஒரு நாள் முழுவதும் நடைபெறும் இம்மாநாட்டில் 2 சமய நூல்களான நால்வர் பற்றிய நூலும் ஞானப்பழம் என்ற பெயரில் கேள்வி பதிலாக அமைந்திருக்கும் ஆங்கில நூலும் வெளியிடப்படவுள்ளது. அதோடு, நால்வர் மன்றத்தின் அகபக்கம் அறிமுகம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு பதிவு நாடா பகுதி 4 வெளியீடு, திருமுறை நடனம், திருமுறை இன்னிசை, திருமுறை சொற்பொழிவுகள் முதலானவை இடம்பெறவுள்ளது. மேலும், இம்மாநாட்டில் முக்கிய அங்கமாக 100 சமய ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கு 60 வெள்ளி கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 800 பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம். அதுமட்டுமின்றி, பங்கேற்பாளர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை தேநீரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மலேசிய நால்வர் மன்றத்தின் செயலவை உறுப்பினர்களான இராமசாமி, இராஜூ, தியாகேஸ்வரி, இளைஞர் பகுதி பொறுப்பாளர் ஜித்தேந்திரன் முதலானோர் கலந்துக்கொண்டனர். தமிழ் மறையாம் திருமுறை மாநாடு குறித்த மேல்விவரங்களுக்கு பாலகிருஷ்ணன் (012-2347495), சுப்பிரமணியம் (016-2224771), பூபதி (012-7727841), செல்வராஜூ (012-6980190), தமிழ்செல்வம் (019-4807012) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

spot_img

latest articles

explore more

2 comments

  1. அருமையான மாநாடு.இளைய தலைமுறையினர் நன்கு பயன்படுத்திக் கொண்டால் நம் நாட்டில் சமயம் தலைத்தோங்கும்

Comments are closed.