பீஜிங்:
அடிக்கடி நிலநடுக்கத்துக்கு இலக்காகும் பூமியின் ‘நெருப்பு வளையம்’ பகுதியில் அமைந்துள்ள சீனாவின் வடபகுதியில் அவ்வப்போது பலத்த மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அந்நாட்டின் வட பகுதியில் தலைநகர் பீஜிங்கில் இருந்து கிழக்கே அமைந்துள்ள தங்ஷான் பகுதியில் கடந்த 1976-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்துக்கு சுமார் 3 லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், வட பகுதியின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள லங்பாங் நகரை மையமாக கொண்டு இன்று பிற்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தலைநகர் பீஜிங்கில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.


