Homeமலேசியாநம்பிக்கைக் கூட்டணியில் துன் மகாதீர் தனிச்சையாக செயல்பட முடியாது! காலீட் சாமாட்

நம்பிக்கைக் கூட்டணியில் துன் மகாதீர் தனிச்சையாக செயல்பட முடியாது! காலீட் சாமாட்

கோலாலம்பூர், பிப்.22-
உருமாற்ற தீப்பந்தத்தை துன் டாக்டர் மகாதீர் அணைக்க நினைத்தாலும் அவரால் முடியாது. காரணம், நம்பிக்கைக் கூட்டணியிலுள்ள இதர தலைவர்களும் அவரை கண்காணிப்பதாக அமானா கட்சி விமர்சகர்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

இது குறித்து அமானா கட்சியின் தொடர்பு பிரிவு இயக்குநர் காலீட் சாமாட் கூறுகையில், பிரதமராக அதிகாரத்தில் இருந்ததைப் போன்று துன் மகாதீர் இப்போது இல்லை. அதனால், அவர் மீண்டும் நாட்டை வழிநடத்தினால் பயப்பட தேவையில்லை என அவர் தெரிவித்தார்.

அன்வார் இப்ராஹிம், முஹம்மட் சாபு, லிம் கிட் சியாங், லிம் குவான் எங் முதலானோர் இதற்கு முந்தைய அரசாங்கத்தால் நியாயமில்லாமல் சிறை வைக்கப்பட்ட போது, அவர்கள் அனைவரும் நாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தங்களது சொந்த வேதனைகளை ஒதுக்கி வைக்க முடிவெடுத்த போது ஒரு சிலர் எதற்கான ஒரு தனிநபர் மீது கோபத்தை வெளிபடுத்த வேண்டும்?

துன் மகாதீர் நாட்டை வழிநடத்திய போது 1980இலிருந்து ஊழல் முறை நிகழ்ந்தது. அதனால், அவர் நாட்டை ஊழலிருந்து விடுவிக்க விரும்பும்போது அவருக்கு இறுதி வாய்ப்பு வழங்கக்கூடாதா? என காலீட் சாமாட் கேள்வியெழுப்பினார். மேலும், துன் மகாதீர் பிரதமரானால் அவர் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாததற்கான காரணத்தை காலீட் சாமாட் வழங்கினார்.

எதிர்கட்சி கூட்டணி முன்பு போல் பலவீனமாக இல்லை. பிரதமர் வேட்பாளராக அவரை தேர்தெடுத்துள்ளது பொறுப்பற்ற செயல் அல்ல. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு புதிய அரசியல் கூட்டணியிலிருந்து அவர் கற்றுக்கொண்டுள்ளார். 92 வயதான அவரால் தாங்கிக்கொள்ள முடியும். நம்பிக்கைக் கூட்டணியின் கூட்டத்தில் அனைவரும் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்ட போது துன் மகாதீர் அவற்றை கவனமாக கேட்டு அனைவரின் ஒப்புதலுடன் முடிவுகள் எடுக்கப்பட்டது.

துன் மகாதீரின் கட்சியான பெர்சத்து தீபகற்ப மலெசியாவில் 52 நாடாளுமன்ற தொகுதியிலும் பி.கே.ஆர். 51 தொகுதியிலும் ஜ.செ.க. மற்றும் அமானா முறையே 35 மற்றும் 27 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும், தனது சொந்த தேவைக்காக துன் மகாதீர் கூட்டணியை பயன்படுத்திக்கொள்ள முடியாது. அதிகாரத்தில் இருப்பதற்கு அவருக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படுவதாக காலீட் சாமாட் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more