அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஈஜோக் நில விவகாரத்தில் தீர்வு காண முடியாததை அம்னோ ஒப்புக்கொள்ள வேண்டும்! உமார் அலி பாஷா
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஈஜோக் நில விவகாரத்தில் தீர்வு காண முடியாததை அம்னோ ஒப்புக்கொள்ள வேண்டும்! உமார் அலி பாஷா

கோலாசிலாங்கூர், பிப்.22-
சுமார் 20 ஆண்டுகள் நிலவி வந்த அலாம் முத்தியாரா மற்றும் அலாம் உத்தாமா புக்கிட் செராக்கா கைவிடப்பட்ட வீடமைப்பு விவகாரத்தில் நடப்பு சிலாங்கூர் மாநில அரசாங்கம் தீர்வு கண்டுள்ளதை அம்னோ தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கைவிடப்பட்ட அவ்விரு வீடமைப்பு திட்டங்களுக்கான நடவடிக்கைக்குழுவின் தலைவர் உமார் அலி பாஷா தெரிவித்தார்.

சுயநலம் காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அவ்விரு வீடமைப்பு விவகாரங்களுக்கு தங்களால் தீர்வு காண முடியாததை சில அம்னோ தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

தங்களது காலத்தில் ஏற்பட்ட இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாத அவர்கள் தற்போது இப்பிரச்னைக்கு மாநில அரசு தீர்வு கண்டுவிட்ட பிறகு அம்னோ தலைவர்கள் அது குறித்து கேள்விகளை எழுப்புவது ஏன்? சிலாங்கூர் அம்னோ தேசிய முன்னணியின் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்நேரம் இந்நிலங்களை வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் ஏலத்தில் விற்றிருக்கும் என ஜெரம் புக்கிட் கூச்சிங் தெங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உமார் அலி பாஷா குறிப்பிட்டார்.

1063 பேரில் 987 குடியேற்றக்காரர்களுக்குத்தான் வீடுகளைப் பெறுவதற்கு உரிமை உள்ளது. 76 குடியேற்றக்காரர்கள் தங்களது வீட்டுமனை நிலத்தை பழைய மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்றுவிட்டனர். அதோடு, அந்த 987 குடியேற்றக்காரர்களில் 358 பேர் தங்களின் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டதைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. காரணம், அவர்கள் காலமாகிவிட்டனர்.

கைவிடப்பட்ட இந்த வீடமைப்பு திட்டங்களில் தற்போது தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு இழப்பீடாக 180,000 தொகையும் 250,000 வெள்ளி வீடுகளும் வழங்கப்படுகிறது. இந்த வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு அதன் மதிப்பு 450,000 வெள்ளிக்கும் குறையாது. இதன் வாயிலாக, எங்களுக்கு இழப்பீடு உள்பட ஒட்டுமொத்த சொத்த மதிப்பாக 630,000 வெள்ளி எங்களுக்கு கிடைக்கின்றது.

இவ்விவகாரத்தில் சிறந்த முறையில் தீர்வு கண்ட சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கு தாம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக உமார் அலி பாஷா கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன