கார்கிவ், பிப்.22 –
ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்றின் முதல் ஆட்டத்தில் உக்ரேனின் ஷக்தார் டொனெட்ஸ்க் 2 – 1 என்ற கோல்களில் இத்தாலியின் ஏ.எஸ். ரோமா அணியை வீழ்த்தியது. ஒரு கோலின் பின் தங்கியிருந்த ஷக்தார் இறுதியில் 2 கோல்களில் வெற்றி பெற்றுள்ளது.

முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் செங்கிஸ் உன்டர் போட்ட கோலின் மூலம் ஏ.எஸ் ரோமா 1 -0 என்ற கோலில் முன்னணிக்கு சென்றது.எனினும் இரண்டாம் பாதியில் பாகுன்டா பெரேரா, பிரேட் போட்ட இரண்டு கோல்கள் , ஷக்தார் டொனெட்ஸ்க்கின் வெற்றியை உறுதிச் செய்தது.

இன்னும் மூன்று வாரங்களில் இரண்டாம் கட்ட ஆட்டம் ஒலிம்பிக் அரங்கில் நடைபெறவுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஏ.எஸ் ரோமா காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேற இலக்குக் கொண்டுள்ளது.


