Homeவிளையாட்டுசாம்பியன்ஸ் லீக் - மீண்டும் சொதப்பியது மென்செஸ்டர் யுனைடெட் !

சாம்பியன்ஸ் லீக் – மீண்டும் சொதப்பியது மென்செஸ்டர் யுனைடெட் !

செவில், பிப்.22 –

சாம்பியன்ஸ் லீக் எனப்படும் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்றின் முதல் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் , ஸ்பெயினின் செவியாவுடன் சமநிலைக் கண்டு ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் கோல் காவலர், டாவிட் டே ஹேவின் அசாத்திய திறமையால் மென்செஸ்டர் யுனைடெட் தோல்வியில் இருந்து தப்பியது.

செவியாவின் சொந்த அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியுள்ளது. இந்த ஆட்டத்திலும் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ, மத்திய திடல் ஆட்டக்காரர் போல் பொக்பாவை முதன்மை அணியில் களமிறக்கவில்லை. மாறாக இளம் ஆட்டக்காரர் ஸ்கோட் மெக்தோமிக்கு வாய்ப்பு வழங்கியிருந்தார்.

எனினும், 17 ஆவது நிமிடத்தில் ஆண்டர் ஹெரேரா காயம் அடைந்ததை அடுத்து பொக்பா மாற்று ஆட்டக்காரராக நுழைந்தார். முதல் பாதி ஆட்டத்தில் செவியா மேற்கொண்ட இரண்டு அபாயகரமான தாக்குதல்களை டாவிட் டே ஹே முறியடித்தார்.

இரண்டாம் பாதியின் இறுதியில் மென்செஸ்டர் யுனைடெட் ரொமெலு லுக்காகூ ஒரு கோலைப் போட்டிருந்தாலும் பந்து அவரின் கையப் பட்டு சென்றதால் நடுவர் அந்த கோலை அங்கீகரிக்கவில்லை. மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் இவ்விரண்டு அணிகளும் மீண்டும் சந்திக்கவுள்ளன.

spot_img

latest articles

explore more