Homeவிளையாட்டுயூரோப்பா லீக் - இன வாத சர்ச்சையில் பொருசியா ஆட்டக்காரர்

யூரோப்பா லீக் – இன வாத சர்ச்சையில் பொருசியா ஆட்டக்காரர்

மிலான், பிப்.23 –

யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் 16 கிளப்புகள் பங்கேற்கும் சுற்றுக்கு ஜெர்மனியின் பொருசியா டார்ட்மூண்ட் தகுதிப் பெற்றுள்ளது.வியாழக்கிழமை இத்தாலியில் நடைபெற்ற 32 கிளப்புகளுக்கான சுற்றில் பொருசியா டார்ட்மூண்ட் 1 -1 என்ற கோல்களில் இத்தாலியின் அட்லாந்தாவுடன் சமநிலைக் கண்டது.

எனினும் கடந்த வாரம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பொருசியா டார்ட்மூண்ட் 3- 2 என்ற கோல்களில் வெற்றி பெற்றிருந்தது.இதனையடுத்து 4 – 3 என்ற ஒட்டு மொத்த கோல்களில் பொருசியா டார்ட்மூண்ட் , 16 கிளப்புகள் பங்கேற்கும் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது.

அட்லாந்தா அணியின் ஒரே கோலை ராபெல் தோலோய் போட்ட வேளையில் மார்ச் ஷ்மேல்சர் போட்ட கோலின் வழி பொருசியா டார்ட்மூண்ட் ஆட்டத்தை சமப்படுத்தியது. இந்த ஆட்டத்தில் அட்லாந்தா ரசிகர்கள் இன வாதத்தை தூண்டும் வகையில் குரங்கு ஒலிகளை எழுப்பியதாக பொருசியா டார்ட்மூண்ட் ஆட்டக்காரர் மிட்சி பாட்சூவாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமது டுவிட்டரில் இதை குறிப்பிட்ட மிட்சி பாட்சூவாய், 2018 ஆம் ஆண்டில் இன்னமும் இனவாத குரல்கள்….நாங்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகி விட்டோம், நீங்கள் எஞ்சிய ஆட்டங்களை தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்வீர்கள் என நம்புகிறோம் என பாட்சூவாய் டுவிட் செய்திருந்தார்.

spot_img

latest articles

explore more